அமேசானில் மீண்டும் 'ஹானர் டேஸ் சேல்': இந்த முறை என்னென்ன சலுகைகளை கொண்டுவந்துள்ளது?

விளம்பரம்
Written by Harpreet Singh மேம்படுத்தப்பட்டது: 30 மே 2019 09:48 IST
ஹைலைட்ஸ்
  • மே 31-ஆம் தேதி வரை நடக்கவுள்ளது இந்த விற்பனை
  • ஹானர் வியூ 20, ஹானர் 10 லைட் ஆகிய ஸ்மார்ட்போன்கள் சலுகை பெற்றுள்ளன.
  • யெஸ் பேன்க் கார்டுகளுக்கு 5 சதவிகித தள்ளுபடி

சலுகை விலையில் விற்பனையாகவுள்ள ஹானர் போன்கள்

Photo Credit: Amazon India

ஹவாய் நிறுவனத்துடன் இணைந்து மீண்டும் 'ஹானர் டேஸ் சேல்' விற்பனையை அறிவித்ததுள்ளது அமேசான் நிறுவனம். மே 31-ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்த விற்பனையில், 9,000 ரூபாய் வரையில் ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகள் வழங்கவுள்ளது அமேசான் நிறுவனம். மேலும் யெஸ் பேன்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள அமேசான் நிறுவனம், யெஸ் பேன்க் கிரடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்தனைகளுக்கு 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடியை வழங்கவுள்ளது. முன்னதாக, அமேசான் நிறுவனம் மே 13 முதல் மே 17 வரை ஹானர் டேஸ் சேலை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஹானர் டேஸ் சேலின் ஒரு பகுதியாக, ஹானர் 10 லைட் தனது ஸ்மார்ட்போன் வகைகளுக்கு தள்ளுபடியை பெற்றுள்ளது. அதன்படி, 3GB + 32GB வகையிலான இந்த ஸ்மார்ட்போன், 9,999 ரூபாயிற்கும் மற்றும் 4GB + 64GB வகை ஹானர் 10 லைட், 11,999 ரூபாயிற்கும் விற்பனையாகவுள்ளது.

Advertisement

17,999 ரூபாய் மதிப்பு கொண்ட 4GB + 64GB சேமிப்பு அளவு கொண்ட ஹானர் 8X-ன் விலை, இந்த விற்பனையில் 12,999 ரூபாய் மட்டுமே.

இந்த ஹானர் டேஸ் சேலில், 4GB + 64GB சேமிப்பு அளவு வகை கொண்ட ஹானர் 9N-ன் விலை, 9,999 ரூபாய் மட்டுமே. இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்த பொழுது, இதன் விலை 13,999 ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, 4GB + 128GB சேமிப்பு அளவு வகை கொண்ட ஹானர் 9N-ன் விலை, 11,999 ரூபாய் மட்டுமே. இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்த பொழுது, இதன் விலை 17,999 ரூபாயாக இருந்தது.

ஹானர் வியூ 20-யும் இந்த விற்பனையில் இடம் பெற்றுள்ளது. இந்த விற்பனை காலத்தில் 6GB RAM + 128GB சேமிப்பு கொண்ட இந்த ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போனின் விலை, 37,999 ரூபாய். அதே நேரம் 8GB RAM + 256GB சேமிப்பு கொண்ட இந்த ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போனின் விலை, 45,999 ரூபாய். இந்த ஸ்மார்ட்போபனுக்கு மட்டும் மாற்றுமொரு சலுகையை வழங்கியுள்ள அமேசான் நிறுவனம், ஹானர் டேஸ் சேலின் பொழுது இந்த ஸ்மார்ட்போனை எந்த வங்கியின் கார்டை உபயோகித்து பெற்றாலும் 5,000 ரூபாய் தள்ளுபடி வழங்கவுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Honor, Amazon, Honor Days Sale
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.