ஹானர் 10 லைட், ஹானர் 8X, ஹானர் 9N, ஹானர் வியூ 20 ஆகிய ஸ்மார்ட்போன்கள் சலுகைகளை பெற்றுள்ளது.
Photo Credit: Amazon India
சலுகை விலையில் விற்பனையாகவுள்ள ஹானர் போன்கள்
ஹவாய் நிறுவனத்துடன் இணைந்து மீண்டும் 'ஹானர் டேஸ் சேல்' விற்பனையை அறிவித்ததுள்ளது அமேசான் நிறுவனம். மே 31-ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்த விற்பனையில், 9,000 ரூபாய் வரையில் ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகள் வழங்கவுள்ளது அமேசான் நிறுவனம். மேலும் யெஸ் பேன்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள அமேசான் நிறுவனம், யெஸ் பேன்க் கிரடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்தனைகளுக்கு 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடியை வழங்கவுள்ளது. முன்னதாக, அமேசான் நிறுவனம் மே 13 முதல் மே 17 வரை ஹானர் டேஸ் சேலை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஹானர் டேஸ் சேலின் ஒரு பகுதியாக, ஹானர் 10 லைட் தனது ஸ்மார்ட்போன் வகைகளுக்கு தள்ளுபடியை பெற்றுள்ளது. அதன்படி, 3GB + 32GB வகையிலான இந்த ஸ்மார்ட்போன், 9,999 ரூபாயிற்கும் மற்றும் 4GB + 64GB வகை ஹானர் 10 லைட், 11,999 ரூபாயிற்கும் விற்பனையாகவுள்ளது.
17,999 ரூபாய் மதிப்பு கொண்ட 4GB + 64GB சேமிப்பு அளவு கொண்ட ஹானர் 8X-ன் விலை, இந்த விற்பனையில் 12,999 ரூபாய் மட்டுமே.
இந்த ஹானர் டேஸ் சேலில், 4GB + 64GB சேமிப்பு அளவு வகை கொண்ட ஹானர் 9N-ன் விலை, 9,999 ரூபாய் மட்டுமே. இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்த பொழுது, இதன் விலை 13,999 ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, 4GB + 128GB சேமிப்பு அளவு வகை கொண்ட ஹானர் 9N-ன் விலை, 11,999 ரூபாய் மட்டுமே. இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்த பொழுது, இதன் விலை 17,999 ரூபாயாக இருந்தது.
ஹானர் வியூ 20-யும் இந்த விற்பனையில் இடம் பெற்றுள்ளது. இந்த விற்பனை காலத்தில் 6GB RAM + 128GB சேமிப்பு கொண்ட இந்த ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போனின் விலை, 37,999 ரூபாய். அதே நேரம் 8GB RAM + 256GB சேமிப்பு கொண்ட இந்த ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போனின் விலை, 45,999 ரூபாய். இந்த ஸ்மார்ட்போபனுக்கு மட்டும் மாற்றுமொரு சலுகையை வழங்கியுள்ள அமேசான் நிறுவனம், ஹானர் டேஸ் சேலின் பொழுது இந்த ஸ்மார்ட்போனை எந்த வங்கியின் கார்டை உபயோகித்து பெற்றாலும் 5,000 ரூபாய் தள்ளுபடி வழங்கவுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Reno 16 Series Early Leak Hints at Launch Timeline, Dimensity 8500 Chipset and Other Key Features