போன் 15 இந்தியாவில் 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்டது
பண்டிகை காலங்கள் வந்துட்டா போதும், ஸ்மார்ட்போன் வாங்குறதுக்கு சரியான நேரம்னு சொல்லலாம். அதுலயும், Apple iPhone வாங்கணும்னு கனவு கண்டுகிட்டிருக்கிறவங்களுக்கு இது ஒரு செம சான்ஸ். Amazon-ன் மிகப் பெரிய விற்பனை நிகழ்வான Amazon Great Indian Festival 2025, செப்டம்பர் 23-ஆம் தேதி தொடங்க இருக்கு. இந்த விற்பனையில iPhone 15-ஐ Rs. 45,000-க்கும் குறைவா வாங்கலாம்னு ஒரு தகவல் வெளியாகி, எல்லாரையும் ஆச்சரியப்பட வச்சிருக்கு. சமீபத்தில் Apple நிறுவனம் iPhone 17 சீரிஸ்-ஐ அறிமுகப்படுத்தினதால, பழைய மாடல்களுக்கு விலைக் குறைப்பு கொடுத்திருக்காங்க. அதன்படி, Amazon Sale-ல iPhone 15-க்கு மிகப்பெரிய தள்ளுபடி கிடைக்கும்னு எதிர்பார்க்கப்படுது. இப்போ Amazon-ல iPhone 15-ன் விலை சுமார் Rs. 59,990 ஆக இருக்கு. ஆனா, இந்த விற்பனையில, அதோட விலை அதிரடியா குறையும்னு சொல்லப்படுது.
iPhone 15-ன் விலையை Rs. 45,000-க்கும் கீழ கொண்டு வர்றதுக்கு சில வழிகள் இருக்கு. இத நாம பல Offers-ஐ சேர்த்து பயன்படுத்துறது மூலமா அடையலாம்.
iPhone 17 வந்திருந்தாலும், iPhone 15 இப்போ வரைக்கும் ஒரு மாஸ் Phone தான். இதுல A16 Bionic chip இருக்கு. அதுனால, பெர்ஃபார்மன்ஸ்-க்கு எந்த குறையும் இருக்காது. மேலும், Dynamic Island, 48MP மெயின் கேமரா, USB-C போர்ட், சிறந்த பேட்டரி லைஃப்-னு நிறைய அம்சங்கள் இருக்கு. இந்த அம்சங்கள் எல்லாமே சேர்ந்து, இந்த விலைக்கு iPhone 15-ஐ வாங்குறது ஒரு செம Deal தான். இந்த Amazon Great Indian Festival 2025 விற்பனை செப்டம்பர் 23-ல ஆரம்பிச்சாலும், Amazon Prime உறுப்பினர்களுக்கு ஒரு நாள் முன்னாடியே அதாவது செப்டம்பர் 22-லேயே Early Access கிடைக்கும். அதனால, ஸ்டாக் தீர்ந்து போறதுக்கு முன்னாடி, நீங்க iPhone வாங்கணும்னு நினைச்சா, Prime மெம்பர்ஷிப் எடுத்து வெச்சுக்கிறது ஒரு நல்ல யோசனை. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
...மேலும்