மீண்டும் வருகிறது அமேசான் Great Indian Festival 2019 விற்பனை!

இந்த வார இறுதியில் வருகிறது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2019 விற்பனை

மீண்டும் வருகிறது அமேசான் Great Indian Festival 2019 விற்பனை!

OnePlus 7 Pro, iPhone XR போன்களுக்கு தள்ளுபடியை வழங்குகிறது அமேசான்

ஹைலைட்ஸ்
  • அக்டோபர் 13 முதல் Amazon Great Indian Festival 2019 sale
  • தள்ளுபடி விலையில் mobile phones, laptops, TV-கள்
  • பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையை நடத்தி வருகிறது
விளம்பரம்

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2019 விற்பனை பண்டிகை காலத்தை குறிக்கும் வகையில் 'Celebration Special' மூலம் மீண்டும் வர உள்ளது. அமேசானின் பிக் தீபாவளி விற்பனை அக்டோபர் 13 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 17 ஆம் தேதி வரை நடக்கும். பிரைம் சந்தாதாரர்களுக்கு அக்டோபர் 12 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனை தொடங்கும். முந்தைய விற்பனையைப் போலவே, புதிய கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையும், தள்ளுபடிகளை வழங்கும். ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், ஹெட்ஃபோன்கள், டிவிக்கள் மற்றும் பிற மின்னணு சாதனம் ஆகியவற்றில் தொகுக்கப்பட்ட சலுகைகளை வழங்கவுள்ளது. ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்கள் விற்பனையின் போது 10 சதவீத உடனடி தள்ளுபடிக்கு தகுதி பெறுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட மொபைல்களில், screen replacement, no-cost EMIs மற்றும் exchange offers ஆகியவற்றை அமேசான் வழங்குகிறது.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2019 விற்பனை - மொபைல் போன்களில் சிறந்த சலுகைகள்:

விற்பனைக்கு முன்னதாக, அமேசான் மொபைல் போன்களில் வரவிருக்கும் சில முக்கிய சலுகைகளை அடுத்த வாரம் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது நேரடியாக ஒளிபரப்பவுள்ளது. முந்தைய மாபெரும் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையைப் போன்ற ஒப்பந்தங்களை சில மாற்றங்களுடன் எதிர்பார்க்கலாம்.

Oneplus 7 அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2019 விற்பனையின் போது மீண்டும் தள்ளுபடி விலையில் ரூ. 29,999 (MRP ரூ. 32,999)-க்கு கிடைக்கிறது.  Redmi 7A-வின் விலை ரூ. 4,999 (MRP ரூ .6,499)-யாகவும், Samsung Galaxy M30-யின் விலை ரூ. 9,999 (MRP ரூ .11,000)-யாகவும் விற்பனை செய்யப்படுகிறது. Oneplus 7 Pro கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.44,999 (MRP ரூ. 48,999)-க்கு கிடைக்கும்.

அமேசான் iPhone XR-ன் விலை ரூ. 44,999 (MRP ரூ. 49,900)-யாகவும், Samsung Galaxy Note 9 ரூ. 42,999 (MRP ரூ. 73,600)-யாகவும் வரவிருக்கும் மாபெரும் இந்தியன் ஃபெஸ்டிவல் 2019 விற்பனையின் போது விற்பனை செய்யப்படும். முந்தைய விற்பனையைப் போலவே, Samsung Galaxy M30 களில் 1,000 ரூபாய் உடனடி தள்ளுபடி சலுகையை வழங்குகிறது அமேசான். (இது அனைத்து ப்ரீபெய்ட் ஆர்டர்களுக்கும் செல்லுபடியாகும்). Samsung Galaxy M10s ரூ. 8,999 (MRP ரூ .10,000)-க்கு விற்பனை செய்யப்படும்.

ஹவாய் நிறுவனத்தின் P30 Lite ரூ. 15,990 (MRP ரூ. 21,990)-க்கு கிடைக்கிறது. Samsung Galaxy A50 ரூ. 18,990 (MRP ரூ. 24,000)-க்கு அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது விற்பனை செய்யப்படும். பழைய ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேஞ் செய்து Galaxy Note 10+ வாங்குபவர்களுக்கு, விற்பனையின் போது கூடுதலாக 6,000 ரூபாய் உடனடி தள்ளுபடியை அமேசான் வழங்குகிறது.

இதற்கிடையில், பிளிப்கார்ட் இந்த வார இறுதியில் இருந்து தனது பிக் தீபாவளி விற்பனையையும் நடத்தி வருகிறது. வால்மார்ட்டுக்குச் சொந்தமான நிறுவனம், மொபைல் போன்களில் அதன் சிறந்த சலுகைகளை வெளிப்படுத்தியுள்ளது, அவை விற்பனையின் போது நேரலைக்கு வரும்.

கேஜெட்டுகள் 360 உடன் இணைந்திருங்கள். ஏனெனில், இந்த வார இறுதியில் அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையிலிருந்து சிறந்த ஒப்பந்தங்களைத் தேர்ந்தெடுப்போம்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Galaxy S26: Camera Upgrades மற்றும் Snapdragon 8 Elite Gen 5 உடன் முழு விவரங்கள் லீக்
  2. வெறும் ₹1,299-க்கா ANC நெக்பேண்டா? Lava-வோட இந்த புதிய ஆடியோ ப்ராடக்ட் எப்படி இருக்குன்னு பாருங்க!
  3. மொபைல் கெய்மிங்க்கு இதான் Next Level! OnePlus 15 பத்தி தெரிஞ்சுக்கணுமா? மிஸ் பண்ணாதீங்க
  4. இந்திய கம்பெனில இருந்து மிரட்டலான போன்! Lava Agni 4 டீஸர் பத்தி முழு விவரம்!
  5. ரியல்மி-யின் புதிய ராக்கெட்! Realme GT 8 Pro நவம்பர்-ல் Flipkart-ல் தரையிறங்குகிறது!
  6. 7,500mAh சார்ஜரே இல்லாத பேட்டரியா? புதிய iQOO Neo 11 மாடல் சும்மா தெறிக்குது!
  7. 200MP Zeiss கேமராவுடன் Vivo X300 Pro அறிமுகம்! கேமரா பிரியர்களுக்கு ஒரு பொக்கிஷம்
  8. iQOO-வின் அடுத்த ராக்கெட்! iQOO 15, 10,000+ Multi-Core ஸ்கோருடன் Geekbench-ல் மிரட்டல்
  9. ஒன்ப்ளஸ், iQOO-வுக்கு போட்டியாக Realme! GT 8 Pro நவம்பர் 20-ல் இந்தியாவில் அறிமுகம்?
  10. Snapdragon 8 Elite Gen 5 சில்லுடனான முதல் போன்! OnePlus 15 Flagship-ன் ஸ்பெஷல் அம்சங்கள் இதோ
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »