Flipkart's Month-End Mobiles Fest விற்பனை அறிவிற்பிற்கு போட்டியாக அமேசான் நிறுவனம் 'Amazon Fab Phones Fest' என ஸ்மார்ட்போன்களுக்கான ஒரு பிரத்யேக விற்பனைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே துவங்கிய அமேசானின் இந்த விற்பனை, ஆகஸ்ட் 30 வரை நடைபெறவுள்ளது. இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன் சாதனங்கள், 40 சதவிகிதம் வரை தள்ளுபடிகளை பெறுகிறது. இந்த விற்பனை காலத்தில் HDFC வங்கியின் கிரடிட் கார்டுகளுக்கு 500 ரூபாய் வரை உடனடி தள்ளுபடியை வழங்கவுள்ளது. கிரடிட் மற்றும் டெபிட் கார்டு EMI பரிவர்த்தனைகளுக்கு 250 ரூபாய் வரை தள்ளுபடி எனத் தள்ளுபடிகளை வழங்கவுள்ளது.
அமேசானின் இந்த விற்பனையில் Samsung Galaxy M30 (4GB + 64GB) ஸ்மார்ட்போன் 1000 ரூபாய் விலை குறைக்கப்பட்டு 13,990 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. அதே நேரம் Samsung Galaxy M20 ஸ்மார்ட்போனின் 3GB RAM + 32GB வகை, 9,990 ரூபாய் என்ற விலையிலும், 4GB RAM + 64GB வகை 11,990 ரூபாய் என்ற விலையிலும் விற்பனையாகவுள்ளது.
அதேபோல Honor 9N 4GB/ 64GB சேமிப்பு வகை, 8,499 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 13,999 ரூபாயில் அறிமுகமானது. அதே போல, 17,999 ரூபாய்க்கு அறிமுகமான 4GB/ 128GB சேமிப்பு வகை 10,999 ரூபாய்க்கு விற்பனையில் வைக்கப்பட்டுள்ளது.
அமேசானின் 'Amazon Fab Phones Fest' விற்பனையில் இந்த Redmi Y2 ஸ்மார்ட்போனின் 64GB வகை, 7,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது.
ரெட்மி 6 தொடர் ஸ்மார்ட்போன்களும் இந்த தள்ளுபடி விற்பனையில் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் Redmi 6 (3GB+64GB) ஸ்மார்ட்போன் 6,999 ரூபாய்க்கு விற்பனையாகவுள்ளது. Redmi 6A (2GB+16GB) ஸ்மார்ட்போன் 6,199 ரூபாய் விலையிலும், Redmi 6 Pro (4GB+64GB) ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய் என்ற விலையிலும் விற்பனையாகவுள்ளது.
Xiaomi Mi A2 4GB RAM + 64GB சேமிப்பு வகை 2,000 ரூபாய் விலை குறைக்கப்பட்டு 9,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. மறுமுனையில், 6GB RAM + 128GB சேமிப்பு வகை Mi A2 ஸ்மார்ட்போன், 3,000 ரூபாய் விலை குறைக்கப்பட்டு 12,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது.
பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் வரிசையில் iPhone XR ஸ்மார்ட்போன், 58,999 ரூபாய்க்கு விற்பனையில் வைக்கப்பட்டுள்ளது. ஹவாய் Mate 20 Pro, ஓப்போ R17, ஹானர் View 20, ஓப்போ Reno, LG V40, மற்றும் ஓப்போ R17 Pro ஆகிய ஸ்மார்ட்போன்கள் இந்த விற்பனையில் தள்ளுபடிகளை பெற்றுள்ளது. OnePlus 7 மற்றும் OnePlus 7 Pro ஸ்மார்ட்போன்கள், 12 மாத விலையில்ல EMI சலுகைகளுடன் கிடைக்கப்பெறுகிறது. Huawei P30 Pro ஸ்மார்ட்போனுடன் 20,990 ரூபாய் மதிப்பிலான Huawei Watch GT ஸ்மார்ட்வாட்ச் இலவசம் என அறிவித்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்