OnePlus நிறுவனம் ஒரு அசத்தலான போனை களமிறக்கத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
Photo Credit: OnePlus
OnePlus Ace 6T मध्ये 9,000mAh बॅटरी, Snapdragon 8s Gen 4, 165Hz डिस्प्ले
இப்போ வரப்போற ஒரு போன் பத்தி கேட்டா சும்மா ஷாக் ஆகிடுவீங்க! ஏன்னா, இதுவரைக்கும் எந்த பிராண்ட்-உம் பெரிய போன்ல இப்படி ஒரு பேட்டரியை கொடுக்க ட்ரை பண்ணது இல்லை. ஆனா, நம்ம OnePlus கம்பெனி அதை செய்யப் போறதா தகவல் வந்துருக்கு. என்ன போன்னு கேட்டீங்கன்னா, அதுதாங்க OnePlus Ace 6 Turbo! இந்த போன் தான் இப்போ சீனா லீக்ஸ் (China Leaks) வட்டாரத்துல மாஸா பேசப்பட்டு வருது.
என்ன மேட்டருன்னா, இந்த Ace 6 Turbo-ல 9,000mAh திறன் கொண்ட பேட்டரி இருக்குமாம்! அடேங்கப்பா! 9,000mAh-ன்னா சும்மா இல்ல, ஒரு நார்மல் யூசர் தாராளமா ரெண்டு நாள் வரைக்கும் சார்ஜ் போடாம யூஸ் பண்ணலாம். பஸ்ஸோ, ட்ரெயினோ... எங்க போனாலும் சார்ஜர் பத்தி கவலையே இல்லைன்னு ஆகிடும்! சமீபத்துல வந்த தகவல்கள், '9K லெவல்' பேட்டரி இருக்கும்னு சொல்றாங்க. இது உண்மையா இருந்தா, OnePlus-க்கு வேற லெவல் ரீச் கிடைக்கும்.
அதுக்குத் தான் OnePlus இருக்கானே! இந்த போனுக்கு பவர் கொடுக்க போறது, Snapdragon 8s Gen 4 சிப்செட். இது Snapdragon 8 Gen 4-க்கு கொஞ்சம் கீழ் நிலையில் இருந்தாலும், பெர்ஃபார்மன்ஸ்ல கொஞ்சமும் குறை வைக்காது. முக்கியமா, இதுல ஹார்டுவேர் லெவல் சிப் என்ஹான்ஸ்மென்ட்ஸ் (Hardware-level Chip Enhancements) இருக்கும்னு சொல்றாங்க. அதாவது, இந்த சிப்செட்-ஐ வச்சிருக்கிற மத்த போன்களை விட, இந்த Ace 6 Turbo-ல பெர்ஃபார்மன்ஸ் இன்னும் சிறப்பா இருக்குமாம். கேமிங் லவ்வர்ஸ்க்கு இது செம பூஸ்ட்.
இந்த Ace 6 Turbo-ல 6.78-இன்ச் ஃபிளாட் டிஸ்ப்ளே இருக்கும்னு சொல்றாங்க. ரெஃப்ரெஷ் ரேட் கூட சும்மா டாப் நாட்ச்! 144Hz இல்லனா 165Hz ரெஃப்ரெஷ் ரேட்-உடன் வரும்னு எதிர்பார்க்கப்படுது. கேம் ஆடும்போது, இந்த ஹை ரெஃப்ரெஷ் ரேட் குடுத்தா, ஸ்கிரீன் சும்மா வெண்ணெய் மாதிரி ஸ்மூத்தா இருக்கும்.
இந்த போன் சைனால 2026-ன் தொடக்கத்துல (Early 2026) அதாவது ஸ்ப்ரிங் ஃபெஸ்டிவலுக்கு பக்கத்துல வரும்னு டிப்ஸ் கிடைச்சிருக்கு. மேலும், சைனாவுக்கு வெளியில இந்த போன் OnePlus Nord 6 என்ற பேர்ல வர வாய்ப்பு இருக்குன்னும் தகவல் சொல்லுது.
இப்போதைக்கு லீக்ஸ் தான் வந்துருக்கு. ஆனா, 9,000mAh பேட்டரி + Snapdragon 8s Gen 4 காம்போ கண்டிப்பா மாஸ் தான். இந்த வருஷம் டர்போ பிராண்ட்ல வர்ற Redmi Turbo 5 போன்ற போன்களுக்கு OnePlus-ன் சவால் தான் இந்த Ace 6 Turbo. சோ, கேமிங் இல்லனா அதிக பேட்டரி லைஃப் விரும்புறவங்களா நீங்க இருந்தா, இந்த போனுக்காக கண்டிப்பா வெயிட் பண்ணலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Redmi Pad 2 Pro, Redmi Buds 8 Pro Could Launch in China Soon