Vivo T4x 5G செல்போன் மார்ச் 2025ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது
Photo Credit: Vivo
Vivo T3x 5Gக்குப் பின் Vivo T4x 5G வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போது நாம் பார்க்க இருப்பது Vivo T4x 5G செல்போன் பற்றி தான்.
Vivo T4x 5G செல்போன் மார்ச் 2025ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் ரூ.15,000க்குள் விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Vivo T4x 5G செல்போன் ஏப்ரல் 2024ல் இந்தியாவில் Snapdragon 6 Gen 1 SoC உடன் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo T3x 5G செல்போனை தொடர்ந்து வரும் என்று கூறப்படுகிறது.
MySmartPrice அறிக்கையின்படி, Vivo T4x 5G மார்ச் 2025ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரியவந்துள்ளது. சரியான தேதி இன்னும் வெளியாகவில்லை. முந்தைய மாடலைப் போலவே விலை ரூ. 15,000க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அறிக்கையின்படி, விவோ T4x 5G ஸ்மார்ட்போன் 6,500mAh பேட்டரியைக் கொண்டிருக்கலாம்.இது அதன் பிரிவில் மிகப்பெரியது என்று கூறப்படுகிறது. தற்போதுள்ள விவோ T3x 5G ஸ்மார்ட்போன் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த போன் இந்தியாவில் ப்ரோண்டோ பர்பிள் மற்றும் மரைன் ப்ளூ வண்ணங்களில் வழங்கப்படும் என்று அறிக்கை கூறியது.
Vivo T4x 5G செல்போனின் வடிவமைப்பில் டைனமிக் லைட் அம்சம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வெவ்வேறு அறிவிப்புகளைக் குறிக்க வித்தியாசமாக ஒளிரும். கைபேசியைப் பற்றிய வேறு எந்த விவரங்களும் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அடுத்த சில நாட்களில் மேலும் வெளியாகும்.
குறிப்பாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் Vivo T3x 5G செல்போனின் விலை குறைக்கப்பட்டது . 4GB ரேம் + 128GB மெமரி, 6GB + 128GB, மற்றும் 8GB + 128GB ஆகிய மாடல்கள் முறையே ரூ. 12,499, ரூ. 13,999 மற்றும் ரூ. 15,499 விலையில் கிடைக்கிறது. இதே செல்போன் 4GB, 6GB மற்றும் 8GB ரேம் வகைகளுக்கு முறையே ரூ. 13,499, ரூ. 14,999 மற்றும் ரூ. 16,499 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செல்போன் Crimson Bliss, Celestial Green மற்றும் Sapphire Blue வண்ண விருப்பங்களில் விற்பனையாகிறது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம். வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி சப்போர்ட் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
The Offering Is Streaming Now: Know Where to Watch the Supernatural Horror Online
Lazarus Is Now Streaming on Prime Video: Know All About Harlan Coben's Horror Thriller Series