Photo Credit: Oppo
Oppo K12 Plus ஸ்மார்ட்போன் சீனாவில் சனிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. Snapdragon 7 Gen 3 சிப்செட் 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி இதில் உள்ளது. இது ColorOS 14 மூலம் இயங்குகிறது. Android 14 இயங்கு தளத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும் 80W சார்ஜிங் சப்போர்ட் உடன் 6,400mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. Oppo K12 Plus செல்போனில் இரட்டை பின்புற கேமரா யூனிட் மற்றும் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கிறது. இந்த செல்போன் நீடித்துழைக்கும் வகையில் டிசைன் செய்யபட்டுள்ளது என Oppo நிறுவனம் கூறியுள்ளது. இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP54 மதிப்பீடப்பட்ட கட்டமைப்பை கொண்டுள்ளது.
Oppo K12 Plus செல்போன் 8GB RAM மற்றும் 256GB மெமரி கொண்ட அடிப்படை மாடலின் விலை தோராயமாக ரூ. 22,600 விலையில் தொடங்குகிறது. இதற்கிடையில், 12GB ரேம் 256GB மெமரி மற்றும் 12GB ரேம் 512GB மெமரி மாடல் விலை முறையே தோராயமாக ரூ. 25,000 மற்றும்தோராயமாக ரூ. 29,800 இருக்கும் என கூறப்படுகிறது. இது பசால்ட் பிளாக் மற்றும் ஸ்னோ பீக் ஒயிட் வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
Oppo K12 Plus செல்போன் அக்டோபர் 15 ஆம் தேதி சீனாவில் விற்பனைக்கு வரும் என்றுஅறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் முன்கூட்டிய ஆர்டர்கள் இப்போது திறக்கப்பட்டுள்ளன. தோராயமாக ரூ. 1,200 கொடுத்து இரண்டு 256ஜிபி மெமரி மாடல் Oppo K12 Plus செல்போன்களை வாடிக்கையாளர்கள் புக் செய்யலாம்.
Oppo K12 Plus செல்போன் இரட்டை சிம் கொண்டது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ColorOS 14 அவுட்-ஆஃப்-பாக்ஸில் இயங்குகிறது. இது 6.7-இன்ச் முழு-HD+ (1,080x2,412 பிக்சல்கள்) AMOLED திரையை கொண்டுள்ளது. இது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் இயங்கும். இந்த செல்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி வரையிலான LPDDR4X ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு Sony IMX882 சென்சார் கொண்ட 50 மெகாபிக்சல் முதன்மைக் கேமராவைப் பயன்படுத்தலாம். அதே சமயம் IMX355 சென்சார் கொண்ட 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமராவானது வைட் ஆங்கிள் ஷாட்களைக் கையாளும். முன்பக்கத்தில், f/2.4 துளை கொண்ட 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
Oppo K12 Plus ஆனது 512GB வரை உள்ளடங்கிய மெமரியை கொண்டுள்ளது. MicroSD கார்டு ஸ்லாட் வழியாக இதனை 1TB வரை மேலும் அதிகரிக்கலாம். இது 5G, 4G LTE, Wi-Fi 6, புளூடூத் 5.3, GPS மற்றும் NFC இணைப்புகளை சப்போர்ட் செய்கிறது. ப்ராக்ஸிமிட்டி சென்சார், சுற்றுப்புற ஒளி சென்சார், கைரோஸ்கோப், முடுக்கமானி மற்றும் இ-காம்பஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது.
Oppo K12 Plus செல்போனில் 6,400mAh பேட்டரி உள்ளது. இதனை 80W SuperVOOC அடாப்டரைப் பயன்படுத்தி சார்ஜ் செய்யலாம். ஸ்மார்ட்போனில் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் உள்ளது. வீட்டு உபகரணங்களைக் கட்டுப்படுத்த அகச்சிவப்பு (IR) டிரான்ஸ்மிட்டர் உள்ளது. இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்புக்கான IP54 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது, Oppo K12 Plus செல்போன் மொத்தமாக 192g எடையுடையது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்