Vivo Y28s, Vivo Y28e வந்தாச்சு! ஆர்டர் பொளக்க போகுது!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 30 ஜூலை 2024 16:24 IST

Photo Credit: Vivo

Vivo Y28s மற்றும் Vivo Y28e பட்ஜெட் 5G ஸ்மார்ட்போன்களாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன . புதிய Vivo Y28 சீரிஸ் ஃபோன்கள் MediaTek Dimensity 6100+ 5G SoC சிப் வசதியுடன் வருகிறது. 8ஜிபி வரை ரேம் இருக்கிறது. 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.56-இன்ச் எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது.  Vivo Y28s மற்றும் Y28e இரண்டுமே5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளன. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP64 மதிப்பீட்டை பெற்றுள்ளது. இரண்டு போன்களிலும் இரட்டை பின்புற கேமரா யூனிட் உள்ளது. Vivo Y28s செல்போன் 50 மெகாபிக்சல் Sony IMX852 சென்சார் உடன் வருகிறது. Vivo Y28e செல்போன் 13 மெகாபிக்சல் பிரதான கேமராவைக் கொண்டுள்ளது.


விலை எவ்வளவு?

Vivo Y28s

4 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு 13,999 ரூபாய். 
6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு 15,499 ரூபாய் 
8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு 16,999 ரூபாய் 

இது விண்டேஜ் ரெட் மற்றும் ட்விங்கிங் பர்பிள் வண்ணங்களில் வழங்கப்படுகிறது.

Vivo Y28e

4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு 10,999 ரூபாய் 
4 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு 11,999 ரூபாய் 

இது ப்ரீஸ் கிரீன் மற்றும் விண்டேஜ் ரெட் வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இரண்டு செல்போன்களும் பிளிப்கார்ட், விவோ இந்தியா இ-ஸ்டோர் மற்றும் அனைத்து முக்கிய சில்லறை விற்பனைக் கடைகளிலும் கிடைக்கிறது. 

Advertisement

Vivo Y28s, Vivo Y28e உள்ள அம்சங்கள் 

vivo Y28s மற்றும் Vivo Y28e மாடல் இரண்டும் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Funtouch OS 14 மூலம் இயங்குகிறது. 90Hz புதுப்பிப்பு வீதம், 840nits உச்ச பிரகாசம் மற்றும் TUV சான்றிதழுடன் 6.56 இன்ச் LCD திரையை கொண்டுள்ளது. HD+ தெளிவுத்திறன் கொண்ட திரையைக் கொண்டுள்ளது. LPDDR4X ரேம் கொண்ட 6nm octa-core MediaTek Dimensity 6100 5G மூலம் இயக்கப்படுகின்றன. 

இரண்டு செல்போன்களும் குறைந்த ஒளி மற்றும் பிரகாசமான ஒளி இருந்தாலும் படமெடுப்பதற்கு சூப்பர் நைட் கேமரா பயன்முறை மற்றும் மல்டி ஸ்டைல் போர்ட்ரெய்ட் வசதியை கொண்டுள்ளன. 5G, ப்ளூடூத் 5.4, GPS, Wi-Fi மற்றும் USB Type-C போர்ட் உள்ளது. Vivo Y28s பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது. அவை தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP64-மதிப்பீட்டை பெற்றுள்ளது. 
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo Y28s, Vivo Y28e, IP64, Vivo

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. எக்ஸினோஸ் 1480 சிப்செட்.. 120Hz சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே! சாம்சங் M56 5G இப்போ செம மலிவு
  2. வாட்ஸ்அப் சேனல் அட்மின்களுக்கு குட் நியூஸ்! இனி உங்க ஃபாலோயர்களுக்கு வினாடி வினா வைக்கலாம்
  3. பட்ஜெட் விலையில் ஒரு மினி தியேட்டர்! 4 ஸ்பீக்கர்ஸ்.. 2.5K டிஸ்ப்ளே!
  4. 2nm சிப்செட்.. ஆனா 'இன்டகிரேட்டட் மோடம்' இல்லையா? சாம்சங் S26-ல் பேட்டரி சீக்கிரம் தீர்ந்துவிடுமா?
  5. Zeiss கேமரா.. Dimensity 9400 சிப்செட்! விவோ X200 விலையில் செம சரிவு! அமேசான்ல இப்போ செக் பண்ணுங்க
  6. ஆஃபர் முடியுறதுக்குள்ள செக் பண்ணுங்க! Huge Discount on Samsung Galaxy S25 Plus 5G: Rs 31,700 Off on Amazon India
  7. லீக்கான மிரட்டல் தகவல்கள்Oppo Find X9 Ultra Leak: Dual 200MP Periscope Cameras Confirmed?
  8. 200MP கேமரா.. 7,000mAh பேட்டரி! கிறிஸ்துமஸ் அன்னைக்கு லான்ச் ஆகுது Xiaomi 17 Ultra
  9. ஆப்பிள் மினிக்கு போட்டியாக 'ஒப்போ மினி'! 4 மாடல்களில் மிரட்ட வரும் Reno 15 சீரிஸ்! 7000mAh பேட்டரியா?
  10. ஜனவரி லான்ச் உறுதி! Poco M8 and M8 Pro India Launch: Everything We Know So Far
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.