5000mAh பேட்டரியோடு இந்தியாவில் அறிமுகமானது Vivo Y28s மற்றும் Vivo Y28e செல்போன்கள்
Photo Credit: Vivo
Vivo Y28s மற்றும் Vivo Y28e பட்ஜெட் 5G ஸ்மார்ட்போன்களாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன . புதிய Vivo Y28 சீரிஸ் ஃபோன்கள் MediaTek Dimensity 6100+ 5G SoC சிப் வசதியுடன் வருகிறது. 8ஜிபி வரை ரேம் இருக்கிறது. 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.56-இன்ச் எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. Vivo Y28s மற்றும் Y28e இரண்டுமே5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளன. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP64 மதிப்பீட்டை பெற்றுள்ளது. இரண்டு போன்களிலும் இரட்டை பின்புற கேமரா யூனிட் உள்ளது. Vivo Y28s செல்போன் 50 மெகாபிக்சல் Sony IMX852 சென்சார் உடன் வருகிறது. Vivo Y28e செல்போன் 13 மெகாபிக்சல் பிரதான கேமராவைக் கொண்டுள்ளது.
Vivo Y28s
4 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு 13,999 ரூபாய்.
6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு 15,499 ரூபாய்
8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு 16,999 ரூபாய்
இது விண்டேஜ் ரெட் மற்றும் ட்விங்கிங் பர்பிள் வண்ணங்களில் வழங்கப்படுகிறது.
Vivo Y28e
4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு 10,999 ரூபாய்
4 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு 11,999 ரூபாய்
இது ப்ரீஸ் கிரீன் மற்றும் விண்டேஜ் ரெட் வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு செல்போன்களும் பிளிப்கார்ட், விவோ இந்தியா இ-ஸ்டோர் மற்றும் அனைத்து முக்கிய சில்லறை விற்பனைக் கடைகளிலும் கிடைக்கிறது.
vivo Y28s மற்றும் Vivo Y28e மாடல் இரண்டும் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Funtouch OS 14 மூலம் இயங்குகிறது. 90Hz புதுப்பிப்பு வீதம், 840nits உச்ச பிரகாசம் மற்றும் TUV சான்றிதழுடன் 6.56 இன்ச் LCD திரையை கொண்டுள்ளது. HD+ தெளிவுத்திறன் கொண்ட திரையைக் கொண்டுள்ளது. LPDDR4X ரேம் கொண்ட 6nm octa-core MediaTek Dimensity 6100 5G மூலம் இயக்கப்படுகின்றன.
இரண்டு செல்போன்களும் குறைந்த ஒளி மற்றும் பிரகாசமான ஒளி இருந்தாலும் படமெடுப்பதற்கு சூப்பர் நைட் கேமரா பயன்முறை மற்றும் மல்டி ஸ்டைல் போர்ட்ரெய்ட் வசதியை கொண்டுள்ளன. 5G, ப்ளூடூத் 5.4, GPS, Wi-Fi மற்றும் USB Type-C போர்ட் உள்ளது. Vivo Y28s பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது. அவை தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP64-மதிப்பீட்டை பெற்றுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,652
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Apple A20 Pro Announced for iPhone 18 Pro: 2nm Architecture, 32-Core Neural Engine, and More