பேட்ரி பவர்னா இப்படி இருக்கணும் - ஆச்சர்யப்படுத்தும் மோட்டோ ரோலா!!
புதிய மோட்டோ ரோலாவின் விலை ரூ. 15,999-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. /
இந்திய சந்தையில் ரெட்மி நோட் 5-க்கு போட்டியாக ஒன் பவர் என்ற புதிய ஃபோனை அக்டோபர் 15-ம் தேதி மோட்டோ ரோலா அறிமுகம் செய்யவுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த ஃபோன் 6.2 இன்ச் டிஸ்ப்ளேயை கொண்டது.
ஆச்சர்யம் ஏற்படுத்தும் வகையில் 5,000 ஆம்பியர் பேட்ரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. இன்னொரு ஸ்பெஷல் தகவல் என்னவென்றால், நாளை 90-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது மோட்டோ ரோலா.
புதிய ஒன் பவரில் எச்.டி. வீடியோவை லைவாக பார்க்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது ஜியோமி போகோ எஃப் 1-ல் இல்லை.
ரேட் எவ்வளவு?
இந்திய சந்தையை பொறுத்தவரையில் ரூ. 15,999-க்கு மோட்டோ ரோலா ஒன் பவர் கிடைக்கும். 64 ஜிபி இன்டர்னல் மெமரியும், 4 ஜி.பி. ரேம் மெமரியும் இதில் உள்ளது. பிரத்யேகமாக ஃப்ளிப்கார்ட்டில் இதனை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான முன்பதிவு இன்று தொடங்கி விட்டது. இன்று ஆர்டர் செய்தால் அக்டோபர் 5-ம் தேதியன்று ஒன் பவர் வீட்டுக்கு வந்து விடும்.
வேற என்ன ஸ்பெஷல்?
ஃபுல் எச்.டி. + எல்.சி.டி. மேக்ஸ் விஷன் பேனல்., ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ சாஃப்ட்வேர், 16 மெகா பிக்ஸல் பின்பக்க கேமரா, 5 மெகா பிக்ஸல் செல்ஃபி கேமரா, 4K வீடியோ ரிக்கார்டிங், 256 ஜி.பி. வரை மெமரி கார்டு பயன்படுத்தும் வசதி, 4G LTE, Wi-Fi 802., rear mounted fingerprint sensor., 15 வாட்ஸ் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜர் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்கள்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
YouTube Updates Search Filters With New Shorts Option and Simplified Sorting