Alcatel நிறுவனம் விரைவில் தனது Alcatel V3 Ultra ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிடவுள்ளது
Photo Credit: Alcatel
അൽകാറ്റെൽ വി3 അൾട്രയിൽ 6.8 ഇഞ്ച് ഡിസ്പ്ലേ ഉണ്ടാകുമെന്ന് പ്രതീക്ഷിക്കുന്നു
Alcatel நிறுவனம் விரைவில் தனது Alcatel V3 Ultra ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிடவுள்ளது. ஆல்காடெல், பிரான்ஸ் டு சென்னை வந்து இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மறுபடி களமிறங்குது! மூணு வருஷ இடைவெளிக்கு அப்புறம், ஆல்காடெல் V3 அல்ட்ரா, V3 ப்ரோ, V3 கிளாசிக் - இந்த மூணு புது ஃபோன்களை மே 27, 2025-ல் இந்தியாவுல வெளியிடப் போகுது. இந்த ஃபோன்கள் எல்லாம் "மேக் இன் இந்தியா" டேக் உடன் தமிழ்நாட்டு மண்ணுல உற்பத்தி ஆகுது. அதுலயும் V3 அல்ட்ரா, 30,000 ரூபாய்க்கு கீழ விலையில் வந்து, நம்ம மத்திய தர மக்களையும், பிரீமியம் விரும்புறவங்களையும் கவரப் போகுது!விலை & கிக்கு ஃபீச்சர்ஸ்,V3 அல்ட்ரா, 6.8 இன்ச் 120Hz OLED டிஸ்பிளே உடன் வருது. TCL-ஓட NXTPAPER டெக்னாலஜி இருக்கு, அதனால கண்ணுக்கு கூலா இருக்கும். மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப், 108MP மெயின் கேமரா, 32MP செல்ஃபி கேமரா, 5,010mAh பேட்டரி (33W ஃபாஸ்ட் சார்ஜிங்) - இதெல்லாம் இதோட மெயின் ஹைலைட்ஸ். இதுல ஸ்டைலஸ் சப்போர்ட் இருக்கு, நோட்ஸ் எழுதுறது, ஸ்கெட்ச் பண்றது எல்லாம் சுலபமா பண்ணலாம். இந்த ஸ்டைலஸ், மோட்டோரோலா எட்ஜ் 60, சாம்சங் S25 அல்ட்ராவுக்கு டஃப் கொடுக்கும்!
V3 அல்ட்ராவோட V3 ப்ரோ, V3 கிளாசிக்-னு ரெண்டு ஃபோனும் வருது. இவங்களோட ஃபுல் டீடெயில்ஸ் இன்னும் வெளியாகல, ஆனா கொஞ்சம் சிம்பிள் ஃபீச்சர்ஸ் உடன் மலிவு விலையில் வரலாம்னு டாக். V3 அல்ட்ரா, TCL 50 ப்ரோ NxtPaper-ஓட ரீப்ரான்டட் வெர்ஷனா இருக்கலாம்னு ஒரு பேச்சு. இவை எல்லாம் பிளிப்கார்ட்ல எக்ஸ்க்ளூசிவா விற்பனை ஆகும்.
ஆல்காடெல், NxtCell-னு ஒரு லோக்கல் கம்பெனியோட கூட்டு சேர்ந்து, "100% மேட் இன் இந்தியா"னு செம பீலிங்கோட ஃபோன்களை உற்பத்தி பண்ணுது. மாதவ் ஷெத், ஆல்காடெல் இந்தியாவோட ஆலோசகரா இருந்து இந்த கம்பேக்கை செமயா பிளான் பண்ணியிருக்காரு. அவரு X-ல போட்ட பதிவுல, ஃபோனோட கருப்பு பாக்ஸ் டிசைன், "பார்ன் இன் பிரான்ஸ், நவ் இன் இந்தியா"னு ஒரு டேக் - செம ட்ரெண்டிங்!
சாம்சங், விவோ, ஓப்போ எல்லாம் இந்திய சந்தையை ஆட்டிப் படைக்குது. ஆனா, V3 அல்ட்ராவோட ஸ்டைலஸ், கண்ணுக்கு கம்ஃபர்ட்டான டிஸ்பிளே, 30,000-க்கு கீழ விலை - இது நம்ம காலேஜ் பசங்க, கிரியேட்டிவ் ஆளுங்களை செமயா கவரும். NXTQuantumOS, AI-பவர் NXTVISION டெக் உடன், வீடியோ பார்க்கும்போதும், படிக்கும்போதும் ஒரு தனி ஃபீல் கொடுக்கும்.
ஆல்காடெல் V3 அல்ட்ரா, தமிழ்நாட்டு ஸ்மார்ட்போன் லவ்வர்களுக்கு ஒரு புது விருந்து! மே 27 அறிமுக விழாவுல ஃபுல் டீடெயில்ஸ் வெளியாகும். இந்த ஃபோன், விலைக்கு தகுந்த மதிப்பு, லோக்கல் தயாரிப்பு, க்யூட் ஃபீச்சர்ஸ் உடன் நம்ம மக்களோட ஃபேவரைட்டா மாறுமா? வெயிட் பண்ணி பார்ப்போம்!
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy S26 Ultra Wallpaper Leak Hints at Possible Colour Options