சியோமி எம் ஐ நோட்புக்கில் இருவிதமான வேரியண்ட்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் 8ம் தலைமுறை கோர் ஐ3 ப்ராசஸருடன் 13.3 இன்ச் டிஸ்பிளே மற்றும் 15.6 இன்ச் பேனலைக் கொண்டுள்ளது. இதன் முக்கியம்சங்கள் 8ம் தலைமுறை கோர் ஐ3 ப்ராஸசர் 8ஜிபி ரேம், யுஎஸ்பி டைப் சி போர்ட், மற்றும் 128ஜிபி SATA SSD ஆகும். இரு நோட்புக்குகளும் விண்டோஸ் 10 எடிஷனில் இயங்கும்.
13..3 இன்ச் எம்ஐ நோட்புக் ஏர் 8ஜிபி ரேமின் விலை சீன ரூபாய்க்கு சிஎன்ஒய் 3,999 ஆகும். மேலும் 15.6 இன்ச் எம்ஐ நோட்புக் ஏர் 4ஜிபி ரேம்/128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட நோட்புக்கின் விலை சிஎன்ஒய் 3,399 ஆகும். தற்போது 13.3 இன்ச் நோட்புக் ஏர் விற்பனையில் உள்ளது. 15.6 இன்ச் நவம்பர் 11லிருந்து விற்பனைக்கு வரும்.
சியோமியின் புதிய எம்ஐ நோட்புக் ஏர் விண்டோஸ் 10ல் இயங்கும். 13.3 இன்ச் துல்லியமான டிஸ்பிளே பேனல். லேப்டாப்பில் 8ம் தலைமுறை இண்டல் கோர் i3-8130u டூயல்-கோர் ஃபோர் திரெட் ப்ராசஸர் L3 4MB cache ப்ராசஸரைக் கொண்டுள்ளது. மேலும் இண்டல் UHD கிராபிக்ஸ் 620, 8ஜிபி டிடிஆர்4 ரேம் மற்றும் SATA SSD ஐக் கொண்டுள்ளது.
எம்ஐ நோட்புக் ஏர் 15.6 இன்ச் வேரியண்டை 13.3 இன்ச் மாடலுடன் ஒப்பிடும்போது கூடுதல் நன்மைகளைக் கொண்டுள்ளது. 15.6 இன்ச் மிக துல்லியமான திரையினைக் பெற்றுள்ளது. மற்றும் 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி SSD கொண்டுள்ளது. 8ம் தலைமுறை இண்டல் ஐகோர் ப்ராசஸருடன் டூயல் கூலிங் அமைப்பினைக் கொண்டுள்ளது.இதன் விற்பனை நவம் 11ம் தேதியிலிருந்து தொடங்குமென்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்