Samsung Galaxy Book 4 Edge இந்தியாவை மிரட்ட வருது

Samsung Galaxy Book 4 Edge இந்தியாவை மிரட்ட வருது

Photo Credit: Samsung

Samsung's 15-inch Galaxy Book 4 Edge comes in a single Sapphire Blue colour

ஹைலைட்ஸ்
  • Samsung Galaxy Book 4 Edge சாம்சங் நாக்ஸ் பாதுகாப்பு உள்ளது
  • Copilot+ PC ஆனது Windows 11 Home உடன் வருகிறது
  • Samsung Galaxy Book 4 Edge 61.2Wh பேட்டரியைக் கொண்டுள்ளது
விளம்பரம்

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது Samsung Galaxy Book 4 Edge டேப்லெட் பற்றி தான்.

Samsung Galaxy Book 4 Edge ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் எக்ஸ் பிளஸ் CPU உடன் AI அம்சங்கள் மற்றும் 15-இன்ச் டிஸ்ப்ளேவுடன் வந்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட Galaxy AI அம்சங்களுடன் இருக்கிறது. Wi-Fi 7 சப்போர்ட் வருகிறது. Copilot+ PC ஆனது Cocreator, Windows Studio Effects மற்றும் Live captions போன்ற AI அம்சங்களை சப்போர்ட் செய்கிறது. இது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை மெமரியை கொண்டுள்ளது.

Samsung Galaxy Book 4 Edge விலை விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. அக்டோபர் 10 முதல் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கொரியா, ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் இது கிடைக்கும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Samsung's 15-inch Galaxy Book 4 Edge ஆனது 15.6-inch full-HD டிஸ்ப்ளே 16:9 விகிதத்துடன், 300nits உச்ச பிரகாசம் மற்றும் 60Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. இது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Snapdragon X Plus 8-core CPU உடன் Adreno GPU மற்றும் Qualcomm Hexagon NPU உடன் வருகிறது. வினாடிக்கு டிரில்லியன் செயல்பாடுகள் செய்யும். 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மற்றும் 512ஜிபி மெமரி மாடலில் வருகிறது.

14 இன்ச் மற்றும் 16 இன்ச் டிஸ்ப்ளே என இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது. இரண்டு மாடல்களும் 12-கோர் ஸ்னாப்டிராகன் X எலைட் சிப்செட்டில் இயங்குகின்றன. Windows 11 Home உடன் வருகிறது. Cocreator, Live Captions மற்றும் Windows Studio Effects உள்ளிட்ட AI திறன்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. Windows Studio Effects தானாகவே ஒளியை மேம்படுத்தும். வீடியோ அழைப்புகளின் போது சத்தங்களை ரத்து செய்யும்.

15 இன்ச் கேலக்ஸி புக் 4 எட்ஜ் சாம்சங் நாக்ஸ் பாதுகாப்பைக் கொண்டுள்ளது. இது புளூடூத் 5.3 மற்றும் Wi-Fi 7 சப்போர்ட் வழங்குகிறது. புதிய மாடலில் உள்ள மற்ற இணைப்பு விருப்பங்களில் இரண்டு USB Type-C (4.0) போர்ட்கள், HDMI 2.1 போர்ட், USB Type-A (3.2) போர்ட், ஒரு microSD போர்ட், ஹெட்ஃபோன் மைக்ரோஃபோன் ஆகியவை உள்ளது. ஒரு பாதுகாப்பு ஸ்லாட். மடிக்கணினியில் இரட்டை மைக்ரோஃபோன்கள் மற்றும் டால்பி அட்மாஸ் ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன.

65W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் 61.2Wh பேட்டரியைக் கொண்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 26 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக் நேரத்தை பேட்டரி வழங்கும் என்று கூறப்படுகிறது. 1.50 கிலோகிராம் எடை கொண்டது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Samsung, Samsung Galaxy Book 4 Edge
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
 
 

விளம்பரம்

விளம்பரம்

© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »