மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான சர்ஃபேஸ் லையின் மடிக்கணினிகளை கடந்த ஆக்டோபர் மாதம் வெளியிட்டது. அந்த மடிக்கணினிகளை தற்போது புதிப்பித்த பிறகு இந்தியாவில் வெளியிடவுள்ளது.
மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 6 மற்றும் மக்ரோசாப்ட் சர்ஃபேஸ் 2 என இரண்டு மடிகணினிகளை அந்நிறுவனம் வெளியிடப்போவதாக கடந்த திங்கட்கிழமை தகவல் வெளியிட்டது. ஜனவரி 28 முதல் ஆன்லையின் தளங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்டில் விற்பனை செய்யபடவுள்ள நிலையில் குரோமா, ரிலையன்ஸ் மற்றும் விஜேய் சேல்ஸ் என ஆப்லையின் ரிடேயில் கடைகளிளும் விற்பனை செய்யப்பட உள்ளனர்.
சர்ஃபேஸ் ப்ரோ 6 மடிக்கணினி ரூபாய் 83,999 கக்கு விற்பனை செய்யப்படும் நிலையில் சர்ஃபேஸ் லப்டாப் 2 வின் விலை 91,999 லுர்ந்து தொடங்குகிறது.
சர்ஃபேஸ் ப்ரோ 6 லாப்டாப் பொருத்தவரை அது நிறுவனத்தின் ஹைய்பிரிட் வின்டோஸ் 10 டாப்லெட் ஆக வெளிவருகிறது. அதன் கிக்ஸ்டாண்டு மற்றும் ஆப்ஷனல் கிக் ஸ்டான்டின் உதவியால் பயன்படுத்த எழிதாக அமைகிறது.
12.3 இஞ்ச் பிக்சல் சென்ஸ் டச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் இந்த மடிக்கணினி 8 வது தலைமுறை இன்டல் யு சீரிஸ் சிபுயுகளை கொண்டுள்ளது. 8 முதல் 16 ஜிபி ரேம் உள்ள இந்த சர்ஃபேஸ் ப்ரோ 6 பல வித்தியாசமான கட்டுமானங்களுடன் வெளியாகுகிறது.
83,999 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ள நிலையில் அதிகபடியாக 1,79,999 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 1டிபி சேமிப்பு வசதி இருக்கும் மடிக்கணினி இந்தியாவில் இன்னும் வெளியிடப்படாத நிலையில் 512 ஜிபி சேமிப்பு வசதியுள்ள மடிக்கணினி மட்டுமே தற்போதைக்கு விற்பனையில் உள்ளது.
14.5 மணிநேரம் வரை சார்ஜை தாங்கும் மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லாப்டாப் 2 சுமார் 1.28 கிலோ எடையுள்ளது. 13.5 இஞ்ச் டச் டிஸ்பிளேவுடன் வெளியாகும் இந்த மடிக்கணினி 8 அல்லது 16 ஜிபி ரேமுடன் வருகிறது. அதுபோல 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி ஆகிய மாடல்களில் கிடைக்கிறிது.
சர்ஃபேஸ் ப்ரோ 6 லப்டாப்பை போல் ஆன்லையின் மட்டும் ஆப்லையின் ஸ்டோர்கிளல் விற்பனை செய்யப்படவுள்ளது.ரூபாய் 91,999 முதல் ரூபாய் 1,48,999 வரை விற்பனை செய்யப்பட வாய்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘சர்ஃபேஸ் லப்டாப்களை பயன்டுத்தும் போது வாடிக்கையாளர்கள் தங்களது கனவுகளையும் ஆசைகளையும் வடிவைக்க உதவுகிறது. மேலும் இதன் அழகான மற்றும் ஸ்டையிலிஷான ஹார்டுவேர் கருவி நமக்கு தேவையான பதில்களை பெற உதவுகிறது.' என மைக்ரோசாப்ட் இந்தியாவின் ஜெனரல் மேனேஜர் பாரியதர்ஷினி மொஹாபாடிரா கூரினார்.