Lenovo Yoga Slim 7i லேப்டாப் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன?

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 14 ஆகஸ்ட் 2020 15:59 IST
ஹைலைட்ஸ்
  • Lenovo Yoga Slim 7i launched in India starting at Rs. 79,990
  • Lenovo Yoga Slim 7i is powered by 10th-gen Intel Core i7 processor
  • The thin and light laptop weighs just 1.36kg

யோகா ஸ்லிம் 7if ஆகும். லேப்டாப் திரையை 180 டிகிரி வரையில் திருப்பலாம்

லெனோவா தரப்பில் யோகா ஸ்லிம் 7i என்ற லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.

கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனமான லெனோவா தற்போது புதிதாக பிரீமியம் வகை லேப்டாப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் பெயர் லெனோவா யோகா ஸ்லிம் 7if ஆகும். லேப்டாப் திரையை 180 டிகிரி வரையில் திருப்பலாம். அதாவது தரை மட்டமாக லேப்டாப்பை விரிக்கலாம். இன்டல் கோர் 10வது ஜெனரேசன் பிராசசரும், 60Wh சக்தி கொண்ட பேட்டரியும் உள்ளது. 

லேப்டாப் சூடவாதைத் தடுக்கும் வகையில் Q கண்ட்ரோல் இன்டலிஜனட் கூலிங்க் சிஸ்டம் உள்ளது. சில குறிப்பிட்ட வகை செயல்பாடுகளுக்கு உதவும் வகையில் செயற்கை நுண்ணறிவு திறனும் உள்ளது.

லெனோவா யோகா ஸ்லிம் 7i விலை:

லெனோவாவின் இந்த புதிய யோகா ஸ்லிம் 7i லேப்டாப்பின் விலை 79,990 ரூபாய்க்கு ஆரம்பமாகிறது. ஸ்லேட் கிரே கலரில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த லேப்டாப் ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். ஆஃப்லைனில் இன்று (ஆகஸ்ட் 14) முதல் கிடைக்கின்றன. 

லெனோவா யோகா ஸ்லிம் 7i சிறப்பம்சங்கள்

விண்டோஸ் 10 இயங்குதளம் முழுவதுமாக வழங்கப்பட்டுள்ளது.திரைக்கும் லேப்டாப் பகுதிக்கும் உள்ள விகிதம் 90 சதவீதம் ஆகும். திரை 1920x1080 பிக்சல் உள்ளது. டால்பி விஷன் ஆதரவு கிடைக்கிறது. குறிப்பாக இந்த லேப்டாப்பின் திரையை 180 டிகிரி வரை திருப்பிக் கொள்ளலாம்.

தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரையில் இன்டெல் i7 கோர் பிராசசர்,  2ஜிபி ரேம் உடன் நிவிடியா ஜி போர்ஸ்  MX350 GDDR5 கிராபிக்ஸ் கார்டு, 16ஜிபி LPDDR4X  ரேம், 3,200MHz கிளாக் ஸ்பீடு, 512GB SSD உள்ளிட்ட அம்சங்கள் நிறைந்துள்ளன.

இந்த லேப்டாப்பின் எடை வெறும் 1.36 கிலோ தான். 320.6x208x14.9மிமி அளவில் உள்ளது. எனவே, எடுத்துச் செல்வதற்கு எளிதாக இருக்கும். 


Is Nord the iPhone SE of the OnePlus world? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 
KEY SPECS
Display resolution 1920x1080 pixels
Processor Core i7
OS Windows 10
Weight 1.36 kg
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஃபிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல்: நத்திங் ஃபோன் 4a சீரிஸ், ரெனோ 15 சீரிஸ், மேலும் பல தள்ளுபடியில் வழங்கப்படும்
  2. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல்: சியோமி பேட் 7, ஒன்பிளஸ் பேட் 2, ரெட்மி பேட் 2 மற்றும் பலவற்றில் சிறந்த சலுகைகள்
  3. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ரூ. 40,000-க்கு கீழ் சிறந்த ஸ்மார்ட்போன் சலுகைகள் அறிவிப்பு
  4. சோனி WH-1000XM6 இப்போது இந்தியாவில் ஆலிவ் கிரே வண்ணத்தில் கிடைக்கிறது: விலை, கிடைக்கும் இடம், அம்சங்கள்
  5. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல்: நீங்கள் தவறவிடக்கூடாத ஒன்பிளஸ் 15 சலுகை இது
  6. அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல் 2026: ரூ. 20,000-க்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் சலுகைகள்!
  7. ரியல்மி 16x 5G பற்றிய தொகுப்பு: வெளியீட்டுத் தேதி, இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  8. Poco M8 Power vs OnePlus Nord CE 6 Lite vs Moto G77 Power: இந்தியாவில் விலை, சிறப்பம்சங்கள் ஒப்பீடு!
  9. ஓட்டுநர் வேலைகள் ஆபத்தில் இருக்குமா? 120,000 ஓட்டுநர் இல்லாத ரோபோடாக்சிகளை இயக்க ஊபர் திட்டம்
  10. itel Ace 3 Heera இந்தியாவில் ₹1,000-க்குள் அறிமுகம்: புளூடூத், கால் ரெகார்டிங், வயர்லெஸ் FM ரேடியோ வசதி!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.