Lenovo Yoga Slim 7i லேப்டாப் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன?

யோகா ஸ்லிம் 7i லேப்டாப்பின் விலை 79,990 ரூபாய்க்கு ஆரம்பமாகிறது

Lenovo Yoga Slim 7i  லேப்டாப் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன?

யோகா ஸ்லிம் 7if ஆகும். லேப்டாப் திரையை 180 டிகிரி வரையில் திருப்பலாம்

ஹைலைட்ஸ்
  • Lenovo Yoga Slim 7i launched in India starting at Rs. 79,990
  • Lenovo Yoga Slim 7i is powered by 10th-gen Intel Core i7 processor
  • The thin and light laptop weighs just 1.36kg
விளம்பரம்

லெனோவா தரப்பில் யோகா ஸ்லிம் 7i என்ற லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.

கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனமான லெனோவா தற்போது புதிதாக பிரீமியம் வகை லேப்டாப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் பெயர் லெனோவா யோகா ஸ்லிம் 7if ஆகும். லேப்டாப் திரையை 180 டிகிரி வரையில் திருப்பலாம். அதாவது தரை மட்டமாக லேப்டாப்பை விரிக்கலாம். இன்டல் கோர் 10வது ஜெனரேசன் பிராசசரும், 60Wh சக்தி கொண்ட பேட்டரியும் உள்ளது. 

லேப்டாப் சூடவாதைத் தடுக்கும் வகையில் Q கண்ட்ரோல் இன்டலிஜனட் கூலிங்க் சிஸ்டம் உள்ளது. சில குறிப்பிட்ட வகை செயல்பாடுகளுக்கு உதவும் வகையில் செயற்கை நுண்ணறிவு திறனும் உள்ளது.

லெனோவா யோகா ஸ்லிம் 7i விலை:

லெனோவாவின் இந்த புதிய யோகா ஸ்லிம் 7i லேப்டாப்பின் விலை 79,990 ரூபாய்க்கு ஆரம்பமாகிறது. ஸ்லேட் கிரே கலரில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த லேப்டாப் ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். ஆஃப்லைனில் இன்று (ஆகஸ்ட் 14) முதல் கிடைக்கின்றன. 

லெனோவா யோகா ஸ்லிம் 7i சிறப்பம்சங்கள்

விண்டோஸ் 10 இயங்குதளம் முழுவதுமாக வழங்கப்பட்டுள்ளது.திரைக்கும் லேப்டாப் பகுதிக்கும் உள்ள விகிதம் 90 சதவீதம் ஆகும். திரை 1920x1080 பிக்சல் உள்ளது. டால்பி விஷன் ஆதரவு கிடைக்கிறது. குறிப்பாக இந்த லேப்டாப்பின் திரையை 180 டிகிரி வரை திருப்பிக் கொள்ளலாம்.

தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரையில் இன்டெல் i7 கோர் பிராசசர்,  2ஜிபி ரேம் உடன் நிவிடியா ஜி போர்ஸ்  MX350 GDDR5 கிராபிக்ஸ் கார்டு, 16ஜிபி LPDDR4X  ரேம், 3,200MHz கிளாக் ஸ்பீடு, 512GB SSD உள்ளிட்ட அம்சங்கள் நிறைந்துள்ளன.

இந்த லேப்டாப்பின் எடை வெறும் 1.36 கிலோ தான். 320.6x208x14.9மிமி அளவில் உள்ளது. எனவே, எடுத்துச் செல்வதற்கு எளிதாக இருக்கும். 


Is Nord the iPhone SE of the OnePlus world? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

  • KEY SPECS
  • NEWS
Display resolution 1920x1080 pixels
Processor Core i7
OS Windows 10
Weight 1.36 kg
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. நீங்க ஆவலோட காத்திருந்த அந்த நாள் வந்தாச்சு! iPhone 16-ன் விலை சல்லுன்னு குறைஞ்சிருக்கு - வெறும் ரூ. 64,900-க்கே வாங்கலாம்
  2. பஸ்ஸுல யாராவது உங்க போனை எட்டிப் பாக்குறாங்களா? இதோ சாம்சங்-ன் மரண மாஸ் தீர்வு
  3. உங்க வாட்ஸ்அப் சேட் இனி பத்திரம்! சைபர் தாக்குதல்களைத் தடுக்க மெட்டா கொண்டு வந்த மிரட்டலான Strict Account Settings
  4. Xiaomi-யின் அடுத்த மாஸ்டர்பீஸ்! 200MP கேமரா செட்டப் உடன் வரும் Xiaomi 17 Max - கேமரா போன் பிரியர்களுக்கு கொண்டாட்டம்
  5. சாம்சங் ரசிகர்களே, இதோ அடுத்த சம்பவம்! ஸ்லிம் லுக்கில் மிரட்டும் Galaxy A57 - அஃபிஷியல் ரெண்டர்ஸ் அவுட்
  6. கெத்தா ஒரு போன்! சாம்சங்-ன் Galaxy Z Flip7 ஒலிம்பிக் எடிஷன் வந்தாச்சு - இதன் சிறப்பம்சங்கள் இதோ
  7. சாம்சங் ரசிகர்களே ரெடியா? வேற லெவல் லுக்கில் வரும் Galaxy A57 - பட்ஜெட்ல ஒரு மினி பிளாக்ஷிப்
  8. நத்திங் ரசிகர்களே ரெடியா? புது டிசைன்.. மிரட்டலான ஸ்டோரேஜ்.. வந்துவிட்டது Nothing Phone (4a)
  9. பெர்ஃபார்மன்ஸ்ல இவனை மிஞ்ச ஆளே இல்ல! iQOO 15 Ultra வரப்போகுது - 7400mAh பேட்டரி + கூலிங் ஃபேன்
  10. கேமரா வேணுமா? அப்போ இதை பாருங்க! Vivo X200T வந்தாச்சு - மூணு 50MP கேமராக்கள்.. வேற லெவல் சிப்செட்
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »