எதிர்பார்த்து காத்திருந்த Lenovo Yoga Pro 7i வந்துருச்சாமே!

லெனோவா நிறுவனம் தங்களது லேட்டஸ்ட் யோகா சீரிஸ் Slim 7i லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

எதிர்பார்த்து காத்திருந்த Lenovo Yoga Pro 7i வந்துருச்சாமே!

Photo Credit: Gadgets 360

ஹைலைட்ஸ்
  • இண்டெல் கோர் அல்ட்ரா 7 பிராசஸர் உள்ளது
  • 14 இன்ச் OLED திரையை கொண்டுள்ளது.
  • Lenovo Yoga Pro 7i வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 73Wh பேட்டரியைக் கொண்டுள்ளது
விளம்பரம்

லெனோவா நிறுவனம் தங்களது லேட்டஸ்ட் யோகா சீரிஸ் Slim 7i லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இதன் விற்பனை இந்தியா முழுவதும் தொடங்கியுள்ளது. யோகா Slim 7i லேப்டாப்பில் இண்டெல் ஆர்க் இண்டேகிரேட்டட் கிராபிக்ஸுடன் கூடிய Intel Core Ultra 7 பிராசஸர் உள்ளதுடன் 14 இன்ச் OLED திரையை கொண்டுள்ளது. சுமார் 1.39 கிலோ எடையுள்ள இந்த லேப்டாப் 14.9 மிமீ அடர்த்தி கொண்டது. Nvidia GeForce RTX 4050 GPU கிராபிக்ஸ் அனிமேஷன்களுக்கு பயங்கரமாக இருக்கும். 

சிங்கிள் 32ஜிபி LPDDR5X RAM மற்றும் 1TB SSD M.2 PCIe 4-ம் தலைமுறை ஸ்டோரேஜ் கொண்ட Lenovo யோகா Slim 7i லேப்டாப்பின் விலை ரூ.1,04,999 ஆகும். இப்போது லூனார் கிரே நிறத்தில் கிடைக்கிறது. VESA DisplayHDR True Black 500 சான்றிதழ் பெற்றது. இதில் அலுமினியம் சேஸ் மற்றும் பேக்லிட் கீபோர்டு உள்ளது.
 Dolby Atmos மற்றும் HD ஆடியோ சிப், குவாட்-ஸ்பீக்கர் அமைப்பு உள்ளது. புளூடூத் 5.3 மற்றும் Wi-Fi 6E இணைப்பை வழங்குகிறது மற்றும் USB Type-A Gen 3.1 போர்ட், USB Type-C Gen 3.2 போர்ட், USB Type-C Thunderbolt 4 போர்ட், HDMI 2.1 போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 

இந்த லேப்டாப்பை வாங்க வேண்டும் என விரும்புகிறவர்கள் லெனோவா இணையதளத்தின் மூலமாகவோ அல்லது லெனோவாவின் பிரத்யேகமான கடைகளிலும் பிரபல இ-காமர்ஸ் தளங்களிலும் மற்ற சில்லரை வணிக கடைகளிலும் வாங்கிக் கொள்ளலாம். 

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Graphics
  • Value for Money
  • Good
  • Excellent high-resolution OLED panel
  • Discrete graphics
  • Good battery life
  • Large trackpad and good keyboard
  • Bad
  • Speakers aren't very loud
  • Glossy display
Display size 14.50-inch
Display resolution 2880x1800 pixels
Touchscreen No
Processor Intel Core Ultra 7
RAM 16GB
OS Windows 11
Hard disk No
SSD 1TB
Graphics Nvidia GeForce RTX 4050
Weight 1.59 kg
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff
 ...மேலும்
        
    
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. Lava Blaze Dragon: ₹10,000-க்குள் இந்தியாவில் லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC உடன் ஜூலை 25 அறிமுகம்!
  2. அறிமுகமானது Samsung Galaxy F36 5G: Circle to Search, Gemini Live - வாங்கலாமா? முழு விவரம்!
  3. இந்தியாவில் Vivo V60 லான்ச் தேதி லீக்! முதல் முறையாக OriginOS - முழு அம்சங்கள், எதிர்பார்ப்புகள்!
  4. அறிமுகமாகிறது Lava Agni 4: புதிய டிசைன், 50MP கேமரா - லீக் ஆன சிறப்பம்சங்கள் மற்றும் விலை இதோ!
  5. அறிமுகமானது Portronics Beem 540 Projector: Android 13 OS, 100 இன்ச் திரை - சலுகையுடன் வாங்குங்க!
  6. iPhone 16-க்கு இவ்வளவு பெரிய தள்ளுபடியா? ₹9,901 குறைப்புடன் Flipkart, Amazon-ல் மாஸ் சலுகைகள்!
  7. அறிமுகமாகிறது Samsung Galaxy F36 5G: Flipkart-ல் உறுதி! இந்த வாரம் லான்ச் - விலை என்னவாக இருக்கும்?
  8. OnePlus 13 அப்டேட்: "Plus Mind" அம்சம் வந்துருச்சு! நினைவாற்றலை அதிகரிக்க புதிய AI வசதி
  9. அறிமுகமானது Vivo X200 FE: 90W ஃபாஸ்ட் சார்ஜிங், Zeiss கேமரா - ஜூலை 23 முதல் விற்பனை!
  10. அறிமுகமானது Vivo X Fold 5: Snapdragon 8 Gen 3 SoC, 6000mAh பேட்டரியுடன் - ஜூலை 30 முதல் விற்பனை!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »