இந்த லேப்டாப்களை பார்த்தாலே வாங்க தோன்றும்

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 9 செப்டம்பர் 2024 11:28 IST
ஹைலைட்ஸ்
  • IdeaPad 5X 2-in-1 57Wh பேட்டரியை கொண்டுள்ளது
  • Lenovo ThinkBook 16 Gen 7 மாடலில் 2 டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர்கள் இருக்கிறத
  • Lenovo IdeaPad Slim 5x 1.48 கிலோகிராம் எடை கொண்டது

Lenovo IdeaPad 5x 2-in-1 comes with 14-inch WUXGA multi touch display

Photo Credit: Lenovo

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது Lenovo ThinkBook 16, IdeaPad 5X, IdeaPad Slim 5X லேப்டாப்கள் பற்றி தான்.

ஜெர்மனியில் நடந்த IFA 2024 விழாவில் Lenovo ThinkBook 16, IdeaPad 5X, IdeaPad Slim 5X லேப்டாப்கள் வெளியிடப்பட்டது. இவை Snapdragon X Plus 8-Core Chipset கொண்டுள்ளன. Lenovo ThinkBook 16 Gen 7 84Wh பேட்டரியைக் கொண்டுள்ளது. மற்ற இரண்டும் 57Wh பேட்டரியை கொண்டுள்ளது.

Lenovo ThinkBook 16 Gen 7 விலை மற்றும் சிறப்பம்சம்

Lenovo ThinkBook 16 Gen 7 விலை இந்திய மதிப்பில் ரூ. 76,400 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் எக்ஸ் பிளஸ் CPU உடன் ஒருங்கிணைந்த Adreno GPU மற்றும் Qualcomm Hexagon NPU கொண்டுள்ளது. இது வினாடிக்கு டிரில்லியன் செயல்பாடுகளை செய்யும். 32 ஜிபி மெமரி உள்ளது. இதனை 1 டிபி வரை அதிகப்படுத்தி கொள்ளலாம். 16-இன்ச் திரை உள்ளது. Windows 11 Pro உடன் வருகிறது.

பணிபுரியும் நிபுணர்களுக்காக வடிவமைக்கப்பட்ட Lenovo ThinkBook 16 Gen 7 வெப்கேம் ஷட்டருடன் முழு-HD RGB கேமராவைக் கொண்டுள்ளது. இது USB Type-C போர்ட் வழியாக 65W சார்ஜிங் ஆதரவுடன் 84Wh பேட்டரியைக் கொண்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் பல நாள் பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இரண்டு டால்பி அட்மோஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது.

பவர் பட்டனில் கைரேகை ஸ்கேனர், கென்சிங்டன் பூட்டு மற்றும் Wi-Fi 7 இணைப்பு ஆகிய வசதிகள் உள்ளது. இரண்டு 10Gbps USB Type-C போர்ட்கள், இரண்டு USB Type-A போர்ட்கள் (5Gbps), ஒரு HDMI 2.1 போர்ட், ஒரு ஹெட்ஃபோன் மற்றும் மைக்ரோஃபோன் காம்போ போர்ட் மற்றும் ஃபோர் இன் ஒன் SD கார்டு ரீடர் ஆகியவை உள்ளது. Lenovo ThinkBook 16 Gen 7 மாடல் 1.82 கிலோகிராம் எடை கொண்டது.

Lenovo IdeaPad Slim 5x, IdeaPad 5x 2-in-1 விலை மற்றும் சிறப்பம்சம்

Lenovo IdeaPad 5x 2-in-1 இந்தியாவில் ரூ. 93,200 விலையில் விற்பனைக்கு வரலாம். Lenovo IdeaPad Slim 5x மாடல் ரூ. 83,800 என்கிற விலையில் விற்பனைக்கு வரலாம். அபிஸ் புளூ மற்றும் கிளவுட் கிரே நிறங்களில் கிடைக்கிறது. Lenovo IdeaPad Slim 5x மற்றும் IdeaPad 5x 2-in-1 இரண்டும் Snapdragon X Plus 8-core CPU உடன் Adreno GPU மற்றும் Qualcomm Hexagon NPU மூலம் இயக்குகிறது. விண்டோஸ் 11 இயங்குதளம் மற்றும் ஷட்டர் கொண்ட முழு-எச்டி RGB கேமராவைக் கொண்டுள்ளது. ஒரு ஜோடி 2W ஸ்பீக்கர்கள் மற்றும் Wi-Fi 7 மற்றும் புளூடூத் 5.3 இணைப்புகளைக் கொண்டுள்ளன. இவற்றில் 57Wh பேட்டரி உள்ளது.

Lenovo IdeaPad 5x 2-in-1 ஆனது 14-இன்ச் WUXGA ஸ்கிரீன் கொண்டுள்ளது. 16GB RAM மற்றும் 1TB வரை SSD மெமரியுடன் வருகிறது. ரண்டு USB Type-C போர்ட்கள், இரண்டு USB Type-A போர்ட்கள், HDMI 2.1 போர்ட், ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோSD கார்டு ரீடர் ஆகியவை உள்ளன. MIL-STD-810H மதிப்பிடப்பட்ட ஆயுள் சான்றிதழை பெற்றுள்ளது. 1.5 கிலோகிராம் எடை கொண்டது.

Lenovo IdeaPad Slim 5x 14-இன்ச் WUXGA OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. USB Type-C போர்ட், இரண்டு USB Type-A போர்ட்கள், HDMI 2.1 போர்ட், ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோSD கார்டு ரீடர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது MIL-STD-810H ஆயுள் மதிப்பீட்டையும் கொண்டுள்ளது .1.48-கிலோகிராம் எடை கொண்டது.

Advertisement

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

 ...மேலும்
        
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Oppo K13 Turbo: போனுக்குள்ள ஃபேனா? இந்தியால லான்ச் ஆன முதல் கூலிங் ஃபேனுடன் கூடிய ஸ்மார்ட்போன்
  2. Lava Blaze AMOLED 2 5G: ₹13,499-க்கு AMOLED டிஸ்ப்ளே, Dimensity 7060 ப்ராசஸரோட மிரட்டல் லான்ச்
  3. Tecno Spark Go 5G: ₹10,000-க்குள்ள இந்தியாவுலயே ஸ்லிம்மான 5G போன்! ஆகஸ்ட் 14-ல் வெளியீடு!
  4. Panasonic-ன் புது மிரட்டல் டிவி! MiniLED தொழில்நுட்பம், Dolby Atmos-உடன் வெளியீடு!
  5. Samsung Galaxy A17 5G: ₹17,500-க்கு ஒரு பெரிய பேட்டரி போன்! பட்ஜெட் மார்க்கெட்டில் ஒரு புதிய அஸ்திரம்!
  6. Lava-வின் புதிய அஸ்திரம்! Blaze AMOLED 2 5G லான்ச் தேதி உறுதி! AMOLED டிஸ்ப்ளே உடன் அதிரடி!
  7. Motorola Razr 60: போன்ல வைரங்கள் பதிக்கப்பட்டு வந்தாச்சு! அசத்தலான Brilliant Collection!
  8. Oppo K13 Turbo சீரிஸ்: போனுக்குள்ளயே ஃபேன் வச்சு மாஸ் காட்ட வர்றான்! இந்தியால ஆகஸ்ட் 11-ல் லான்ச்!
  9. Vivo Y400 5G லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC-வோட கலக்கப் போகுது!
  10. Amazon சேல்ல லேப்டாப் வாங்க இதுதான் சரியான நேரம்! ரூ. 60,000-க்குள்ள டாப் பிராண்டுகளின் மாஸ் டீல்ஸ்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.