Photo Credit: Infinix
Infinix ZeroBook Ultra AI லேப்டாப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ZeroBook Ultra லேப்டாப் AI மூலம் இயக்கப்படுகிறது. 15.6 இன்ச் முழு HD டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. 16.9mm அல்ட்ரா ஸ்லிமாக இருப்பதால் பார்க்க ஸ்டைலாக இருக்கிறது. 32 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி வரை ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. 100W சார்ஜர், ஃபுல்எச்டி ஏஐ வெப்கேம் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களுடன் வந்துள்ளது.
Infinix நிறுவனத்தின் வெளியிட்ட தகவல் அடிப்படையில், ZeroBook Ultra லேப்டாப் ஆனது Gen AI திறன்கள் மற்றும் Intel AI Boost ஆகியவற்றை கொண்டிருக்கும். இதுதவிர்த்து 1TB SSD storage, 32GB DDR5 RAM மற்றும் Intel Meteor Lake அடிப்படையிலான இன்டெல் கோர் அல்ட்ரா ப்ராசஸர் ஆகியவற்றை கொண்டிருக்கும். Intel's first built-in NPU இந்த லேப்டாப்பில் இருக்கிறது. Ray Tracing மற்றும் XE SS Frame Acceleration கொண்ட Intel ARC GPU இருப்பதால் பர்பாமென்ஸ் சக்கை போடு போடும். குவாட் ஸ்பீக்கர்கள் மற்றும் டிடிஎஸ் சவுண்ட் ப்ராசஸிங், எஃப்எச்டி ஏஐ வெப்கேம் மற்றும் டூயல் மைக் அரே போன்ற அம்சங்களும் இடம்பெறும்.
70Whr பேட்டரி மற்றும் 100W சார்ஜரையும் கொண்டிருக்கும். இணைப்புக்கு Wi-Fi 6/6E, SD ஸ்லாட், 3.5mm ஆடியோ ஜாக், USB 3.0 மற்றும் Type-C போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது HDMI 1.4 போர்ட்டையும் கொண்டுள்ளது. பிரபல இ-காமர்ஸ் வளைத்தளமான பிளிப்கார்ட் வழியாக விற்பனை செய்யப்படுகிறது. Infinix ZeroBook Ultra நிறுவனம் மூன்று வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது. இதன் அடிப்படை மாடலின் விலை 59,990 ரூபாயாகவும் இருக்கிறது அதுவே இதன் டாப் மாடலின் விலை 84,990 ரூபாயாக இருக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்