என்னது? மொபைல் விலையில் புது லேப்டாப் வாங்கலாமா?

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 21 ஆகஸ்ட் 2024 11:12 IST
ஹைலைட்ஸ்
  • Infinix InBook Y3 Max விண்டோஸ் 11 OS மூலம் இயங்குகிறது
  • 70Wh பேட்டரியைக் கொண்டுள்ளது
  • 512 ஜிபி வரை மெமரி சப்போர்ட் செய்கிறது

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது Infinix InBook Y3 Max  லேப்டாப் பற்றி தான். 

இந்தியாவில் மலிவு விலையில் ஒரு அட்டகாசமான மற்றும் சக்தி வாய்ந்த லேப்டாப்பாக  Infinix InBook Y3 Max அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. Infinix InBook Y3 Max  லேப்டாப் இந்தியாவில் ஆகஸ்ட் 14ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. Infinix வழங்கும் புதிய பட்ஜெட் லேப்டாப் 16 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.  Intel Core i7 இருக்கிறது. இது விண்டோஸ் 11 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ் OS மூலம் இயங்குகிறது. 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை மெமரியை கொண்டுள்ளது. Infinix InBook Y3 Max அலுமினியம் அலாய் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.  65W வேகமான சார்ஜிங் சப்போர்ட் உடன் 70Wh பேட்டரியைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் Infinix InBook Y3 Max ஆரம்ப விலை ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில்  இன்டெல் கோர் i3 CPU உள்ளது. இது நீலம், சாம்பல் மற்றும் வெள்ளி வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 21 முதல் பிளிப்கார்ட் வழியாகவும் விற்பனைக்கு வருகிறது. 16-இன்ச் முழு-HD ஐபிஎஸ் டிஸ்ப்ளே இருக்கிறது. இது 16:10 விகிதத்துடன் 87 சதவிகித டிஸ்பிளே சைஸ் கொண்டுள்ளது. 300nits பிரகாசத்துடன் இருக்கிறது. 15.6-இன்ச் மடிக்கணினிகளுடன் ஒப்பிடும்போது டிஸ்ப்ளே 11 முதல் 12 சதவீதம் கூடுதலாக இருக்கும் என விளம்பரப்படுத்தப்படுகிறது. மெட்டல் ஃபினிஷுடன் அலுமினியம் அலாய் பாடியை கொண்டுள்ளது. 

Intel Core i3, Core i5 மற்றும் Core i7 விருப்பங்களுடன் ஒருங்கிணைந்த Intel கிராபிக்ஸ் கார்டு உடன் வருகிறது.  CPU ஆனது 16GB வரை LPDDR4X ரேம் மற்றும் 1TB வரை PCIe 3.0 SSD மெமரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் 1TB வரை மெமரியை அதிகப்படுத்த பிரத்யேக சீரியல் ATA (SATA) ஸ்லாட் உள்ளது.

Infinix InBook Y3 Max மாடலில் பேக்லிட் கீபோர்டு மற்றும் 7.06-இன்ச் டிராக்பேடைக் கொண்டுள்ளது. இரண்டு USB 3.0 போர்ட்கள், ஒரு HDMI 1.4 போர்ட், இரண்டு USB Type-C போர்ட்கள், 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் ஒரு microSD கார்டு ஸ்லாட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதிவேக வயர்லெஸ் இணைப்புக்கு Wi-Fi 6 சப்போர்ட் செய்கிறது. இரட்டை மைக்ரோஃபோன்களுடன் கூடிய முழு-எச்டி (1080p) வெப்கேமைக் கொண்டுள்ளது.  இதன் மூலம் கிரிஸ்டல் கிளியர் வீடியோ கால் அழைப்புகளை நீங்கள் இந்த லேப்டாப் மூலம் அனுபவிக்க முடியும். லேப்டாப் சூடாவதை தடுக்க இதில் ஐஸ் கூலிங் டெக்னாலஜி தொழில்நுட்பமும் இடம்பெறுகிறது.

Infinix InBook Y3 Max லேப்டாப் USB Type-C போர்ட் வழியாக 65W வேகமான சார்ஜிங் வசதியை சப்போர்ட் செய்கிறது. 70Wh பேட்டரியைக் கொண்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 14.6 மணிநேரம் வரை பேட்டரி நிற்கிறது. 8.5 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக்கையும் இந்த பேட்டரி வழங்கும் என கூறப்படுகிறது. இது 1.78 கிலோகிராம் எடையுடம் மிக லேசானதாக இருக்கிறது. மேலும் 3.5mm ஹெட்போன்ஸ் மற்றும் ஹெட்போன் ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர், டிஜிட்டல் மைக்ரோபோன்ஸ், DTS ஆடியோ, போன்ற பல அம்சங்களை அடக்கிய லேப்டாப் சாதனமாக வெளிவந்துள்ளது. பட்ஜெட் ஸ்மார்ட்போன் வாங்கும் விலையில் இப்போது இந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கலாம்.
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஃபோல்டபிள் போன் சந்தையில் போர் ஆரம்பம்! ஆப்பிள் ஐபோன் போல்டுக்கு போட்டியாக ஒப்போவின் 'வைடு' டிஸ்ப்ளே போன்
  2. ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! 40 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் OnePlus 13R - பிளிப்கார்ட்டின் மெகா டீல்
  3. சாம்சங்கின் புது பிளான்! மிரட்டலான சிறப்பம்சங்களுடன் வரும் Galaxy M17e - எதோட ரீபிராண்ட் தெரியுமா?
  4. ஒரு தடவை சார்ஜ் போட்டா 3 நாளைக்கு கவலை இல்ல! ஒன்பிளஸின் மெகா லான்ச் - Turbo 6 & 6V அதிரடி விலை மற்றும் விவரம்
  5. விவோவின் மெகா பிளான்! Vivo X200T-ல் நான்கு 50MP கேமராக்கள்? ஆப்பிள், சாம்சங்கிற்கு டஃப் கொடுக்க வரும் புதிய மான்ஸ்டர்
  6. கேமிங் கிங் ரெடி! ஜனவரி 15-ல் லான்ச் ஆகும் iQOO Z11 Turbo - மிரட்டலான சிறப்பம்சங்கள் கசிந்தது
  7. கேமராவுக்கே சவால் விடும் 200MP லென்ஸ்! புது வரவு Oppo Reno 15 சீரிஸ் - விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ
  8. இன்பினிக்ஸின் பலமான ஆட்டம் ஆரம்பம்! 6500mAh பேட்டரி மற்றும் புது XOS 16 உடன் வரும் Infinix Note Edge
  9. வெறும் ரூ. 15,999-க்கு ஒரு கார்வ்டு டிஸ்ப்ளே போனா? Poco M8 5G அதிரடி லான்ச்! சலுகை விவரங்கள் உள்ளே
  10. ஸ்லிம் போன்-ல இவ்வளவு பவரா? ஜனவரி 20-ல் வரும் Moto X70 Air Pro! Snapdragon 8 Gen 5 மற்றும் 50MP பெரிஸ்கோப் கேமரா
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.