உலக அளவில் பிரபலமான கூகுள் ப்ரௌசர் க்ரோம், அதன் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு உள்ளது.
இந்த புதிய அப்டேட் க்ரோம் 67 என்று கூறப்படுகிறது. இது லினக்ஸ், மேக் ஓ.எஸ் மற்றும் வின்டோஸ் ஆகிய நிறுவனங்களின் கணினிகளில் பயன்படுத்தக் கூடிய வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அப்டேட்டின் மிக முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது AR மற்றும் VR வசதிகளை மெருகேற்றித் தருவதால் தான் என்று கூறப்படுகிறது. இந்த கூகுள் க்ரோம்-ன் புதிய அப்டேட் வெர்ஷனின் முழு ஐடி, க்ரோம் 67.0.3396.62 ஆகும். க்ரோம்-ன் அப்டேட் மூலம் HTTP உள்ளடக்க முடியும்.
க்ரோம்-ன் 67 வது வெர்ஷன் வெளியாகி உள்ளது. இந்நிலையில், ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகிய ஆபரேட்டிங் சிஸ்டங்களுக்கு தகுந்தாற் போலவும் சீக்கிரம் க்ரோம்-ன் அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மற்றொரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது, க்ரோம் ப்ரௌசரில் இதுவரை நிலவி வந்த 34 ஆன்லைன் அச்சுறுத்தல்களை இதில் தீர்த்துள்ளதாம் கூகுள். இதன் மூலம் தரவுகள் களவு போவதை பெருமளவு தவிர்க்க முடியும் என்று கூறப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்