இந்தியாவில் வாட்ஸ் ஆப் போல ஃபேஸ்புக் மெசஞ்சர் பிரபலமாகாத நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் சார்பில் இந்த நிலைமையை மாற்ற தீவிரமாக வேலைகள் நடைபெற்று வருகின்றன.
விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய இன்ஸ்டன்ட் சாட்டிங் ஆப், ஒருவரின் ஃபேஸ்புக் நண்பர்களுடன் தொடர்பு கொள்ள மிகவும் எளிமையாக இருக்கும் எனப்படுகிறது. இது மட்டுமின்றி இந்த அப்டேட்டில், நாம் பேசிக்கொண்டிருக்கும் ஒருவரது சாட் மிதக்கும் நீர்குமிழ் ஐகானை கொண்டிருக்கும் எனவும், இதனால் நமது இறுதியான சாட்டை அறிய சுலபமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த வசதி எல்லாவித போன்களிளும் வெளியாவதால் ஃபேஸ்புக் மெசஜ்சரின் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த அப்டேட் வெளியானதற்குப் பிறகு, ஒரு மெசேஜின் மீது நீண்ட அழுத்தம் கொடுத்தால், அது தானாக ரிப்ளை கொடுக்கும் விதத்தில் மாறும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த வசதி நமது வாடஸ் ஆப் ரிப்ளை வசதி போலவே அமைந்துள்ளது.
இந்த வசதிகளுடன் பயனர்களை கவரும் எமோஜிக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் இந்த அப்டேட் வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்கும் என எதிர்பார்கப்படுகிறது.
என்னதான் வாட்ஸ் ஆப் வாடிக்கையாளர்களை அதிகம் கொண்டிருந்தாலும் ஒருவரின் கணினி மற்றும் போன்களில் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி சாட் செய்யும் வசதி வெளியானால் மக்களிடையே ஃபேஸ்புக் ஆபிற்கு நல்ல வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்