நாட்டில் நான்காம் கட்ட ஊரடங்கு தொடங்கியதிலிருந்து, மத்திய அரசு பல விதிகளை தளர்த்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், இ-காமர்ஸ் சேவைகளை நாடு முழுவதும் முழு வீச்சில் தொடங்க முடியும். மே 31 வரை, நான்காம் கட்ட ஊரடங்கில் தடைசெய்யப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் அனைத்து வேலைகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அத்தியாவசிய பொருட்களை மட்டுமே கட்டுப்பாட்டு மண்டலத்தில் வழங்க முடியும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நிலைமையைக் கையாள விரும்பினால் சில நடவடிக்கைகளை தடை செய்யலாம் என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.
இது, இன்னும் சிவப்பு மண்டலத்தில் இருக்கும் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு வழங்க அனுமதிக்கும்.
இருப்பினும், e-commerce நிறுவனங்கள் அரசாங்கத்திடமிருந்து உறுதியான வழிமுறைகளைப் பெற்ற பின்னரே விநியோகத்தைத் தொடங்க முடியும்.
ஊரடங்கின் முதல் இரண்டு கட்டங்களில், ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் அவசரகால பொருட்களை விற்க மட்டுமே அனுமதிக்கப்பட்டன. மூன்றாம் கட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் ஆரஞ்சு மற்றும் பசுமை மண்டலங்களில் மட்டுமே இ-காமர்ஸ் விநியோகத்திற்கான பச்சை சமிக்ஞையை வழங்கியது.
தற்போது, நான்காம் கட்டத்தில் சிவப்பு மண்டலத்திலும் டெலிவரி தொடங்கலாம் என்று கூறியுள்ளது. இருப்பினும், கட்டுப்பாட்டு மண்டலங்களில் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு இன்னும் அனுமது வழங்கப்படவில்லை. வாடிக்கையாளர்கள் அவசரகால தயாரிப்புகளை மட்டுமே ஆர்டர் செய்ய முடியும்.
Disclosure: Paytm's parent company One97 is an investor in Gadgets 360.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்