எஸ்.எம்.எஸ், மிஸ்டு கால் மூலமாக பிஎப் பேலன்ஸை செக் செய்ய வேண்டுமா...இது தான் ஸ்டெப்ஸ்

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 21 பிப்ரவரி 2019 18:11 IST
ஹைலைட்ஸ்
  • Universal Account Number முதலில் ஆக்டிவேட் செய்ய வேண்டும்.
  • 6 மணி நேரத்திற்கு பின் வைப்பு நிதியை தெரிந்து கொள்ள முடியும்.
  • EPFOHO UAN இந்த வார்த்தையை 7738299899 எண்ணிற்கு அனுப்பவும்.

வைப்பு நிதி கணக்கை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

இந்திய நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதியை (Provident fund ) வழங்குவது வழக்கம். பொதுவாக, இது தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பிடித்து வைத்து ‘பணியாளர் வைப்பு நிதி'கணக்கில் டெபாசிட் செய்யப்படும். பணியாளரின் சம்பளத்தில் ரூ. 1000 பிடித்தம் செய்தால் அதே போலான ரூ. 1000த்தை நிறுவனத்தின் உரிமையாளரும் டெபாசிட் செய்ய வேண்டும். இந்த சிறு தொகை நீண்ட நாள் சேர்த்து வைக்கப்படும் போது  ஓய்வூதிய நிதியாகக் கிடைக்கும். மக்களில் பலருக்கும் தங்களுடைய வைப்பு நிதி  கணக்கில் எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்து கொள்வதே இல்லை. இதை எளிமையாக ஆன்லைனிலோ அல்லது குறுஞ்செய்தி வழியாகவோ அல்லது மிஸ்டு கால் மூலமாகவோ தெரிந்து கொள்ளலாம். 

ஆன்லைன் மூலமாக வைப்பு நிதியை தெரிந்து கொள்ளும் முறை 

முதலில் யுனிவர்சல் அக்கவுண்ட் எண்ணை ஆக்டிவேட் செய்ய வேண்டும் Universal Account Number (UAN) 6 மணி நேரத்திற்கு பின் உங்களின் கணக்கு ஆக்டிவேட் ஆகிவிடும். 

ஆக்டிவேட் செய்த பின் 6 மணிநேரம் காத்திருக்க வேண்டும். இந்த நேரம், உங்களின் கணக்கை நீங்கள் கையாளுவதற்கு ஏற்ற வகையில் ஆக்டிவேட்  ஆகுவதற்கான நேரமே. 

பின் வெப்ஸைட்'ஸ் மெம்பர் பாஸ்புக் பேஜ்ஜிற்கு செல்லவும். அதில் உங்களின் யூஏஎன் எண் பாஸ்வேர்ட் மற்றும் கேப்டிகா கொடுத்து லாக்இன் செய்யவும். இப்போது இபிஎஃப் அக்கவுண்ட்  திறந்து விடும். இடது கை பக்கத்தில் Select MEMBER ID to View PassBook அழுத்தினால் உங்களின் வைப்பு நிதியை பார்த்துக் கொள்ள முடியும். 

குறுஞ்செய்தி மூலமாக வைப்பு நிதியை தெரிந்து கொள்ள

எளிமையாக குறுஞ்செய்தி வழியாக வைப்பு நிதியை தெரிந்து கொள்ள முடியும். முதலில் யூஏஎன் எண்ணை ஆக்டிவேட் செய்து 6 மணி நேரத்திற்கு பின் உங்களின் வைப்பு நிதிக் கணக்கை பரிசோதித்து பார்த்துக் கொள்ள முடியும். 

1. யூஏஎன் எண்ணை முதலில் ஆக்டிவேட் செய்யவும். 

Advertisement

2. உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து EPFOHO UAN இந்த வார்த்தையை 7738299899 எண்ணிற்கு அனுப்பவும்.

 3. உடனடியாக உங்களின் வைப்பு நிதிக் கணக்கில் உள்ள தொகையை காட்டிவிடும். 

4. ஆங்கிலம் தவிர்த்து பிற மொழியில் குறுஞ்செய்தி வரவேண்டுமென்றால் பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து EPFOHO UAN TAM இந்த வார்த்தையை 7738299899 இந்த எண்ணிற்கு அனுப்பவும்.

Advertisement

பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி, கன்னடா, மலையாளம், மாராத்தி, பஞ்சாபி, தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தேவையென்றால் முதல் 3 எழுத்தை சேர்த்து அனுப்பவேண்டும். 

மிஸ்டு கால் மூலமாக வைப்பு நிதியை தெரிந்து கொள்ள 

1. யூஏஎன் எண்ணை முதலில் ஆக்டிவேட் செய்யவும்.

Advertisement

 2. கேஒய்சி எண்ணை யூஏஎன் எண்ணுடன் இணைக்கவும். வங்கி எண், ஆதார்,பான் கார்டு எண்ணை யூஏஎன் எண்ணுடன் இணைக்கவும்.

3. மேலே சொன்ன இரண்டு ஸ்டெப்பையும் செய்து முடித்துவிட்டால் 911122901406 இந்த எண்ணிற்கு  பதிவு செய்யப்பட்ட எண் மூலம் மிஸ்டுகால் கொடுக்கவும். 

4. பின் வைப்பு நிதி குறித்த தகவல் குறுஞ்செய்தியாக வந்து விடும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: PF, Check PF Balance

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ₹43,000-க்கு புது Nothing போன்! Phone 4a Pro-ல eSIM சப்போர்ட், புது பிங்க் கலர்! ஆடியோவுல 'Headphone a' வருது
  2. WhatsApp-ல இனி Missed Call வந்தா Voice Message அனுப்பலாம்! புது ஆப்ஷன் வந்துருச்சு! நீங்க ட்ரை பண்ணீங்களா?
  3. WhatsApp-ல இனி Missed Call வந்தா Voice Message அனுப்பலாம்! புது ஆப்ஷன் வந்துருச்சு! நீங்க ட்ரை பண்ணீங்களா?
  4. 45W-க்கு இனி டாட்டா! Galaxy S26 Ultra-ல் 60W சார்ஜிங் வருது! Wireless-ல 25W! சாம்சங் ஃபேன்ஸ் இதைத்தான் கேட்டாங்க
  5. புது Foldable போன்! Huawei Mate X7: 88W சார்ஜிங், 5x ஆப்டிகல் ஜூம்! இந்தியால வருமா?
  6. AI-ல அடுத்த புரட்சி! GPT-5.2-ல என்னென்ன இருக்குன்னு பாருங்க! இமேஜை பார்த்து முடிவெடுக்கும் AI
  7. Oppo Reno 15C வருது! 64MP கேமரா, 100W சார்ஜிங்! இந்த Reno சீரிஸ் மாடல் இந்திய மார்க்கெட்டை கலக்குமா?
  8. Galaxy S26: கேமரா அப்கிரேட் ரத்து; விலை கட்டுக்குள் வைக்க Samsung திட்டம்
  9. புது போன் வாங்க வெயிட் பண்ணுங்க! Realme 16 Pro+ வருது! பெரிஸ்கோப் கேமரா, 7000mAh பேட்டரி: வேற லெவல் டீஸ்
  10. Realme Narzo 90 Series: 7000mAh பேட்டரி, 144Hz டிஸ்பிளே உடன் லான்ச்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.