உலகின் முதல் 8K டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது 'சாம்சங்': இதன் விலை என்ன தெரியுமா?

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 5 ஜூன் 2019 11:56 IST
ஹைலைட்ஸ்
  • சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த டிவி தான் உலகின் முதல் 8K டிவி
  • நான்கு திரை அளவுகளில் வெளியாகியுள்ளது
  • இதன் விலை 10,99,900 ரூபாயிலிருந்து துவங்குகிறது

சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள 'சாம்சங் QLED 8K டிவி'

கடந்த செவ்வாய்க்கிழமை சாம்சங் இந்தியா நிறுவனம் உலகின் முதல் QLED 8K டிவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. தொலைக்காட்சி துறையில் ஒரு புதிய சாதனையாக பார்க்கப்படும் இந்த 'சாம்சங் QLED 8K டிவி'யை ஆடம்பர வீடுகளை மையப்படுத்தியே சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 8K தரம், 8K செயற்கை நுண்ணறிவு மேற்பார்வை, குவாண்டம் ப்ராசஸர் 8K, குவாண்டம் HDR என பல அம்சங்களை கொண்டு ஒரு 8K அனுபவத்தை உங்கள் கண்களுக்கு தரவுள்ளது, இந்த 'சாம்சங் QLED 8K டிவி'. மொத்தம் நான்கு திரை அளவுகளை கொண்டு வெளியாகவுள்ள இந்த டிவி: 98-இன்ச், 82-இன்ச், 75-இன்ச் மற்றும் 65-இன்ச் ஆகிய அளவுகளை கொண்டுள்ளது. இந்த டிவி, 4K UHD டிவிக்களைவிட 4 மடங்கு அதிக தரத்திலும், FHD திரைகளை விட 16 மடங்கு அதிகமான தரத்திலும் காணோளிகளை வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 

சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த 'சாம்சங் QLED 8K டிவி'க்களில், 75-இன்ச் அளவிலான திரை கொண்ட டிவியின் விலை 10,99,900 ரூபாய். 82-இன்ச் டிவியின் விலை 16,99,900 ரூபாய் மற்றும் 98-இன்ச் டிவியின் விலை 59,99,900 ரூபாய். தற்போது, 98-இன்ச் திரை டிவி மட்டுமே முன்பதிவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 65-இன்ச் டிவியின் விலை பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளது சாம்சங் நிறுவனம். இந்த 65-இன்ச் டிவி ஜூலை மாதத்தில் தான் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய டிவியின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது குவாண்டம் ப்ராசஸர் 8K-வில் செயல்படும் 8K செயற்கை நுண்ணறிவு மேற்பார்வை. இது பார்வையாளர்கள் HDMI, USB மற்றும் செட்-டாப் பாக்ஸ் ஆகியவற்றில் பார்க்கும் அனைத்து வீடியோக்களையும் அந்த வீடியோ எந்த தரத்தில் உள்ளது என்பதை பொருட்படுத்தாமல் 8K தரத்தில் காண்பிக்க உதவும். அதுதான் இந்த டிவி காண்பிக்க இருக்கும் மாயாஜாலம். நம்மிடம் தற்போது 8K தரத்திலான வீடியோக்கள் அவ்வளவு அதிகமாக இல்லை, ஆனால் இந்த டிவி அனைத்து வீடியோக்களையும் தனது உண்மையான தரத்திலிருந்து 8K தரத்தில் மாற்றிக்கொள்ளும். 

மேலும் இந்த டிவிக்களை 'வாய்ஸ் கமெண்ட்கள்' மூலம் கட்டுப்படுத்த கூகுள் அசிஸ்டன்ட் வசதி உள்ளது. இந்த டிவியை ஆப்பிள் சாதனங்களுடன் இணைத்துக்கொள்ள 'ஆப்பிள் ஏர்ப்லே 2' வசதியும் உள்ளது. 

சாம்சங் நிறுவனம், QLED 8K டிவிக்கள் மட்டுமில்லாமல், 2019-ஆம் ஆண்டிற்காக QLED டிவிக்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வரிசையில் அறிமுகமான 65-இன்ச் Q90 மாடலின் விலை 3,99,900 ரூபாய். மேலும் Q80 மாடல்களின் விலை, 2,09,900 ரூபாய் (55-இன்ச்) முதல் துவங்கி 6,49,900 ரூபாய் (75-இன்ச்) வரை தொடர்கிறது. அதே நேரம் Q70 மாடல்களின் விலை, 1,69,900 ரூபாய் (55-இன்ச்) முதல் துவங்கி 2,79,900 ரூபாய் (65-இன்ச்) வரை நீள்கிறது. மேலும் மற்றொரு மாடலான Q60-யின் விலை 94,900 ரூபாய் (43-இன்ச்) முதல் 7,49,900 ரூபாய் (82-இன்ச்) வரை உள்ளது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Samsung, Samsung QLED 8K, Samsung QLED
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. அமேசான் பே-வில் அதிரடி! ₹5,000 வரை பேமெண்ட் பண்ண இனி பின் நம்பர் போட வேணாம்
  2. 7000mAh பேட்டரி.. 200MP கேமரா.. ரியல்மி 16 ப்ரோ+ (Realme 16 Pro+) ரகசியங்கள் அம்பலம்
  3. இனி ஆப் ஸ்டோர்ல எதை தேடினாலும் விளம்பரமா தான் இருக்கும்! ஆப்பிள் எடுத்த அதிரடி முடிவு! கடுப்பில் யூசர்கள்
  4. 5G சப்போர்ட்.. 12.1-இன்ச் டிஸ்ப்ளே! வந்துவிட்டது புது OnePlus Pad Go 2! விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க
  5. 7,400mAh பேட்டரியா? ஒன்பிளஸ் வரலாற்றிலேயே மிகப்பெரிய பேட்டரியுடன் வந்துவிட்டது OnePlus 15R
  6. Xiaomi 17 Ultra: 200MP கேமரா, 7,000mAh பேட்டரி உடன் குளோபல் லான்ச் உறுதி
  7. 5200mAh பேட்டரி.. டைமென்சிட்டி 6300 சிப்செட்! வந்துவிட்டது புதிய Moto G Power (2026)
  8. இனி தியேட்டர் உங்க வீட்டுலதான்! சாம்சங்கின் புது மைக்ரோ ஆர்ஜிபி டிவி.. அப்படி என்ன ஸ்பெஷல்?
  9. 10,000mAh பேட்டரியா? ஹானர் வின் (Honor Win) சீரிஸ் டிசைன் மற்றும் கலர்ஸ் வெளியானது
  10. புது Realme 16 Pro+ வருது! 200MP கேமரா, 144Hz டிஸ்பிளே, 7,000mAh பேட்டரி! TENAA லிஸ்டிங்ல எல்லாமே கன்ஃபார்ம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.