₹6,000 பட்ஜெட்டில் 4K Streaming! Amazon Fire TV Stick 4K Select - புதிய Vega OS, Alexa Voice Remote அம்சங்களுடன்!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 31 அக்டோபர் 2025 11:48 IST
ஹைலைட்ஸ்
  • Vega OS மற்றும் 1.7GHz ப்ராசஸர்: புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் வேகமா
  • குறைந்த விலையில் சிறந்த 4K அனுபவம்
  • TV பார்க்காத நேரத்தில், அதை ஒரு டிஜிட்டல் ஆர்ட் டிஸ்பிளேயாக மாற்றும் புதி

Fire TV Stick 4K Select: Vega OS, 4K, Alexa வசதி

Photo Credit: Amazon

உங்க வீட்ல இருக்க பழைய LED/LCD டிவி-யை 4K Smart TV-யா மாத்தணும்னு நினைக்கிறீங்களா? அப்போ உங்களுக்கான செம நியூஸ் இதுதான்! Amazon, இந்தியாவில அவங்களோட புது Fire TV Stick-ஐ லான்ச் பண்ணியிருக்காங்க. அதுதான், Amazon Fire TV Stick 4K Select. இதோட முதல் ஹைலைட்டே இதன் விலைதான். வெறும் ₹5,499-க்கு இந்த டிவைஸ் கிடைக்குது. இது Amazon-னோட 4K Streaming Stick வரிசையிலேயே ரொம்ப மலிவான விலை! இவ்வளவு குறைஞ்ச விலையில 4K Ultra HD அனுபவத்தை கொடுக்க வர்றதுதான் இதோட ஸ்பெஷல். கூடவே HDR10+ சப்போர்ட்டும் இருக்கு. அதனால பிக்சர் குவாலிட்டி, கலர் துல்லியம் எல்லாம் பிரமாதமா இருக்கும்.

இந்த டிவைஸோட முக்கியமான மாற்றம், இதுல பயன்படுத்தப்பட்டிருக்கிற புதுசா அறிமுகப்படுத்தப்பட்ட Vega OS. இது Amazon-னோட புது Operating System. இந்த OS, வேகமான அப்ளிகேஷன் லோடிங் மற்றும் ஸ்மூத்தான இன்டர்ஃபேஸை கொடுக்குமாம். இதற்காகவே, இந்தியாவில இருக்கிற எல்லா Fire TV Stick-லயும் இதுதான் வேகமானதுன்னு சொல்லப்படுற 1.7GHz Quad-core ப்ராசஸர் இதில் இருக்கு.

இந்தச் சின்ன Fire TV Stick 4K Select-ல பல சூப்பரான அம்சங்கள் இருக்கு.

  • Alexa Voice Remote: இந்த ரிமோட் மூலமா நீங்க வாய்ஸ் கமாண்ட் கொடுத்து உங்களுக்குப் பிடிச்ச படத்தையோ, சீரிஸையோ தேடலாம். மேலும், பாட்டு சவுண்ட் அதிகமாக்குறது, டிவியை ஆஃப் பண்றதுன்னு எல்லாத்தையும் இந்த ஒரே ரிமோட்ல செய்யலாம்.
  • Smart Home Integration: இந்த Alexa Voice Remote-ஆல உங்க வீட்ல இருக்கிற Smart Home சாதனங்களான லைட்ஸ், ஃபேன் போன்றவற்றுக்கு வாய்ஸ் கமாண்ட் மூலமா கண்ட்ரோல் கொடுக்கலாம்.
  • Fire TV Ambient Experience: உங்க TV பார்க்காம சும்மா இருக்கும் போது, அது ஒரு டிஜிட்டல் ஆர்ட் கேலரியா மாறும். 2,000-க்கும் மேற்பட்ட ஆர்ட் மற்றும் புகைப்படங்களை நீங்க டிஸ்பிளேல பார்க்கலாம். இந்த அம்சம் இந்தியாவுல Fire TV Stick-ல வர்றது இதுதான் முதல் தடவை.

இந்த டிவைஸை உங்க டிவில இருக்கிற HDMI port-ல கனெக்ட் பண்ணா போதும். Prime Video, Netflix, Disney+ Hotstar, YouTube உட்பட எல்லா முக்கிய OTT தளங்களையும் இது சப்போர்ட் பண்ணும். இந்த Amazon Fire TV Stick 4K Select இப்போ Amazon.in, Flipkart மற்றும் Croma, Reliance Retail போன்ற ரீடெய்ல் கடைகளிலும் கிடைக்குது. உங்க பழைய டிவியை ஸ்மார்ட் டிவியா மாத்த இது ஒரு சிறந்த சாய்ஸா இருக்கும்னு நினைக்கிறீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க!

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Oppo Reno 15C வருது! 64MP கேமரா, 100W சார்ஜிங்! இந்த Reno சீரிஸ் மாடல் இந்திய மார்க்கெட்டை கலக்குமா?
  2. Galaxy S26: கேமரா அப்கிரேட் ரத்து; விலை கட்டுக்குள் வைக்க Samsung திட்டம்
  3. புது போன் வாங்க வெயிட் பண்ணுங்க! Realme 16 Pro+ வருது! பெரிஸ்கோப் கேமரா, 7000mAh பேட்டரி: வேற லெவல் டீஸ்
  4. Realme Narzo 90 Series: 7000mAh பேட்டரி, 144Hz டிஸ்பிளே உடன் லான்ச்!
  5. விரலில் ஒரு Smartwatch! Diesel Ultrahuman Ring வந்துருச்சு! ஹார்ட் ரேட், தூக்கம்னு எல்லாத்தையும் மானிட்டர் பண்ணலாம்
  6. புது Samsung A-சீரிஸ் வருது! A07 5G இந்த மாசம் லான்ச்? A57-ல் பெரிய அப்கிரேட்! Samsung ஃபேன்ஸ் ரெடியா
  7. புதுசா 2 பிளான்! Disney+ Hotstar, ZEE5-ஐ விட கம்மி விலையில் Tata Play Binge-ல் புது OTT கன்டென்ட்
  8. புது Vivo போன் வாங்க ரெடியா? V70, T5x 5G-க்கு BIS சர்ட்டிபிகேட் கிடைச்சிருச்சு! லான்ச் தேதி எப்போ
  9. புது Poco ஃபிளாக்ஷிப் வருது! Poco X8 Pro-க்கு BIS சான்றிதழ்! ₹30,000 ரேஞ்சில் இந்த போனை எதிர்பார்க்கலாமா
  10. புது போன் வாங்க வெயிட் பண்ணுங்க! Realme 16 Pro+ வருது! பெரிஸ்கோப் கேமரா, 7000mAh பேட்டரி
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.