15-வது பிறந்தநாளை கொண்டாடும் ஜிமெயில்!

விளம்பரம்
Written by Indo-Asian News Service மேம்படுத்தப்பட்டது: 1 ஏப்ரல் 2019 18:09 IST
ஹைலைட்ஸ்
  • சுமார் 1.5 பில்லியன் வாடிக்கையாளர்களை ஜிமெயில் கொண்டுள்ளது.
  • இந்த தயாரிப்பு கடந்த 2004 ஆம் ஆண்டில் உறுவாக்கப்பட்டது.
  • நிறுவப்பட்டபோது 1ஜிபி சேமிப்பை மட்டுமே கொண்டிருந்தது!

இன்பாக்ஸ் மெசேஜ்களுக்காக புதிய அப்டேட்களை தயாரிப்பதில் கூகுள் நிறுவனம் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது

கூகுள் நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான ஜிமெயிலுக்கு 15 வயது ஆகிவிட்டது என்றால் நம்ப முடிகிறதா? உலகம் முழுவதும் சுமார் 150 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு இந்த தயாரப்பு, ஏப்ரல் 1 ஆம் தேதி 2004 ஆம் ஆண்டு பாவுல் புச்சிட் என்னும் நபரால் உருவாக்கப்பட்டது.

ஜிமெயில் துவங்கிய காலக்கட்டத்தில் ஒரு வாடிக்கையாளர்க்கு 1 ஜிகாபையிட் சேமிப்பு வசதி மட்டுமே வழங்கப்பட்டது. இன்றோ 15ஜிபி இலவச சேமிப்பு வழங்கும் ஜிமெயில் மூலம் 50 எம்பி ஃபைல்களைப் பெற முடிகிறது.

இதை விட பெரிய ஃபைல்களை அனுப்ப 'கூகுள் டிரைவ்' லிங்கை பயன்படுத்த வேண்டும். யாஹூ மெயில் சேவையை மாதம் தோறும் 228 மில்லியன் பயனாளிகள் உபயோகிக்கின்றனர். ஜிமெயில், ஏஓஎல் மெயில் மற்றும் ஹாட் மெயில் போன்ற தயாரிப்புகளை வாங்கியது குறிப்படத்தக்கது.

இலவச பயன்பாட்டுக்காக அறிமுகம் செய்யப்பட்ட ஜிமெயில், பெரிய நிறுவனங்களின் சேவைக்காக தற்போது கட்டணம் பெற்றுக்கொண்டு சிறப்பு சேவை அளிக்கிறது. ஜிமெயில் துவங்கிய ஒரு வருடத்தில் துவங்கப்பட்ட கூகுள் மேப்ஸ் தற்போது மிகவும் பிரபலமாகிவிட்டது. அதுமட்டுமின்றி யூடியூப், குரோம் பிரவுசர் போன்ற முன்னணி தயாரிப்புகளை அறிமுகம் செய்து உலகத்தில் இருக்கும் பெரும்பான்மையான மக்களை சென்றடைகிறது கூகுள் நிறுவனம்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கூகுள் நிறுவனம், ஜிமெயிலுக்கு பல புதிய அப்டேட்களை அறிமுகம் செய்தது. இந்த புதிய அப்டேட் மூலம் மெயிலுடன் இணைக்கப்பட்டுள்ள ஃபைல்களை விரைவில் நம்மால் பார்க்கப்படுகிறது. மேலும் இன்பாக்ஸ் மெசேஜ்களுக்காக புதிய அப்டேட்களை தயாரிப்பதில் கூகுள் நிறுவனம் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Google, Gmail
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. பெர்பாமன்ஸ்ல மிரட்ட வருது Realme 16 Pro+! அன்டுடு ஸ்கோர் பாத்தா அசந்து போயிருவீங்க
  2. இனி WhatsApp Status-ல பட்டாசு வெடிக்கலாம்! 2026 நியூ இயருக்காக மெட்டா கொண்டு வந்த புது மேஜிக்
  3. இனி Tablet-ல எழுதறது Real-ஆ இருக்கும்! TCL கொண்டு வந்த புது மேஜிக் - Note A1 NxtPaper
  4. போட்டோ எடுக்கும்போது இனி கடுப்பாக வேண்டாம்! Galaxy S26 Ultra-ல இருக்குற அந்த ஒரு ரகசியம்
  5. 200MP கேமரா.. 6000mAh பேட்டரி! Oppo Find N6-ல இவ்வளவு விஷயமா? மிரண்டு போன டெக் உலகம்
  6. விவோ ரசிகர்களுக்கு ஒரு ஷாக் அப்டேட்! X300 Ultra-வில் கேமரா பட்டன் கிடையாதா? ஆனா டிஸ்ப்ளே சும்மா தெறிக்குது
  7. சாம்சங்-ல இருந்து ஒரு "கனெக்டிவிட்டி" புரட்சி! டவர் இல்லாத காட்டுல கூட இனி போன் பேசலாம். Galaxy S26-ல் வரப்போகும் அந்த மேஜிக் பீச்சர்
  8. ஜிம்முக்கு போகாமலே ஃபிட் ஆகணுமா? அமேசான்ல ஆஃபர் மழை! ₹45,000 ட்ரெட்மில் வெறும் ₹10,999-க்கு
  9. ஸ்மார்ட்போன் உலகத்துல ஒரு புதிய கேமரா அரக்கன்! 7000mAh பேட்டரி + ரெண்டு 200MP கேமரான்னு Oppo Find X9s மரண மாஸா வருது
  10. ஜனவரி 6-க்கு ரெடியா இருங்க! 7000mAh பேட்டரி + 200MP கேமரான்னு Realme 16 Pro+ மரண மாஸா வருது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.