பொழுதுபோக்கு சாதனங்கள் தயாரிக்கும் சோனி குழுமத்தின் புகழ்பெற்ற பிஎஸ் 4 வீடியோகேம் சாதனத்தின் தயாரிப்பு விரைவில் நிறுத்தப்படும் என்று அதன் சிஇஓ ஜான் கொதேரா தெரிவித்துள்ளார்.
சோனி குழுமத்தின் இன்ட்ராக்டிவ் என்டர்டெயின்மென்ட் பிரிவின் முதலீட்டாளர்கள் சந்திப்பு (investor relations day) சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்வில், அதன் சிஇஓ ஜான் கொதேரா பேசியதாவது,
"சோனி குழுமத்தின் புகழ்பெற்ற பிளே ஸ்டேஷன் 4 (பிஎஸ் 4) விளையாட்டுக் கருவியை 2013ல் தயாரித்தோம். இதுவரை உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 70 மில்லியன் பிஎஸ் 4 விற்றுத்தீர்ந்துள்ளன. இன்னும் அதற்கான வரவேற்பு இருப்பதால் அவற்றை ஏற்றுமதி செய்துள்ளோம். ஆனால், நிறுவனத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதனால் பிஎஸ் 4 பதிலாக அதன் இடத்தை நிரப்ப புதிய கருவியைக் கொண்டு வர உள்ளோம். பிஎஸ் 4 அதன் இறுதிநாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றே கூற வேண்டும். 2021ம் ஆண்டு வரை சோனி பிளே ஸ்டேஷன் வளர்ச்சி சற்று மந்தமாகவே இருக்கும்" என்று பேசினார்.
ஏற்கனவே சோனியின் பிஎஸ் 5 ரிலீஸ் குறித்து பல்வேறு வதந்திகள் உலா வரும் நிலையில் ஜான் கொதேரோ பேசியிருப்பது பிஎஸ் 5 குறித்து ரசிகர்கள்களிடையே எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்துள்ளது.
If you're a fan of video games, check out Transition, Gadgets 360's gaming podcast. You can listen to it via Apple Podcasts or RSS, or just listen to this week's episode by hitting the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்