உலகத்தில் இருக்கும் பல நாடுகளில் தனக்கென பிரத்யேக ரசிகர்களை கொண்ட அமெரிக்கன் காமொடி தொடரான 'ஃபிரண்ட்ஸ்' இன்று (ஏப்ரல் 1) முதல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகிறது.
இந்தியாவில் இந்த ஷோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இதற்கு முன்னர் இந்த தொடர் 'ஹாட் ஸ்டார்' தளத்தில் ஒளிபரப்பானது. ஹூக் (Hooq) என்னும் நிறுவனத்துடன் இணைந்து கடந்த ஆக்டோபர் மாதம் முதல் இந்த ஷோவை இந்தியாவில் ஒளிபரப்பிய ஹாட் ஸ்டாரின் ஓப்பந்தம் தற்போது நிறைவடைந்த நிலையில், ஃபிரெண்ட்ஸ் தொடரின் அனைத்து 10 சீசன்களும் நெட்ஃபிளிக்சில் இடம் பெற்றுள்ளது.
தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகும் இந்தத் தொடர் வைகாம் 18 தொலைக்காட்சிக்கு சொந்தமான காமொடி சென்ட்ரல் சேனலில் வெளியாகுகிறது.
இதற்காக நெட்ஃபிளிக்ஸ் சார்பில் ரூ.484–554 கோடி வரை வார்னர் ப்ரோஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய ஓப்பந்தத்தின்படி இன்று முதல் ஃபிரண்ட்ஸ் தொடர் நெட்ஃபிளிக்சில் ஒளிபரப்பாகிறது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்