அவெஞ்சர்ஸ் 'எண்ட் கேம்' தமிழில் கதையை உருவாக்கும் ஏ.ஆர் முருகதாஸ்!

விளம்பரம்
Written by Akhil Arora மேம்படுத்தப்பட்டது: 15 பிப்ரவரி 2019 20:12 IST
ஹைலைட்ஸ்
  • அவெஞ்ஜர்ஸ் எண்ட் கேம் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகுகிளது
  • இயக்குனர் முருகதாஸ் இப்படத்தின் டையலாக்குகளை தமிழில் எழுதவுள்ளார்
  • தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

சர்கார், கத்தி மற்றும் கஜினி போன்ற பல முக்கிய படங்களை இயக்கிய தமிழில் முன்னணி இயக்குனரான ஏ.ஆர் முருகதாஸ் தற்போது டிஸ்னி ஸ்டூடியோஸ் உடன் இணையப்போவதாக தகவல் வெளியாகவுள்ளது.

உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் எண்ட் கேமிற்கு தமிழ் ஸ்கிரிப்டை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் எழுதப்போவதாக டிஸ்னி இந்தியா சார்பாக தகவல் வெளியாகியுள்ளது. 44 வயதான இயக்குனர் முருகதாஸ் பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுவரை வெளியான எல்லா மார்வல் கதைகளை போலவே இந்த அவெஞ்ஜர்ஸ் எண்ட் கேம் படமும் ஆங்கிலம்,ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 26 -ம்  தமிழுக்கான அறிவிப்பு மட்டும் வந்துள்ள நிலையில் இந்தி மட்டும் தெலுங்கில் இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை என்பது கூடுதல் தகவல்.

வட்டார மொழிகளில் ஹாலிவுட் படங்கள் வெளியாகுவது அதன் லாபத்தை அதிகரிக்க செய்கிறது. இதற்கு முன்னர் வெளியான இன்ஃப்னிட்டி வார் திரைப்படம் இந்தியில் டப் செய்யப்பட்டு வந்ததால் நல்ல வரவேற்பு பெற்றது. அத்திரைப்படம் மட்டும் தான் இந்தியாவில் ரூ.200 கோடியை வசூல் செய்த முதல் ஹாலிவுட் திரைப்படமாகும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Avengers, Avengers Endgame, AR Murugadoss, Disney, Disney India, Marvel, MCU
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. 9 JBL ப்ரோ ஸ்பீக்கர்கள்,10,200mAh பேட்டரியுடன் மோட்டோ பேட் 70 க்ரூவ் இந்தியாவில் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  2. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி F70 புரோ 5G விலை, வெளியீட்டு தேதி மற்றும் அம்சங்கள் அறிவிப்பு
  3. சோனி WF-1000XM6 உடன் சோனி 1000X தி கலெக்‌ஷன் DSEE அல்டிமேட் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  4. ஒன்பிளஸ் N6x இந்தியாவில் 7,000mAh பேட்டரி, 13-மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  5. இந்தியாவில் eSIM மற்றும் பிசிக்கல் சிம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
  6. இந்தியாவில் PS5 ஸ்டாண்டர்ட் எடிஷன் விலையை சோனி ரூ. 15,000 உயர்த்தியுள்ளது
  7. ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவில் நத்திங் ஃபோன் (4a) விலை ரூ. 3,000 உயரும் என தகவல்
  8. ஆசஸ் பேட் இந்திய விலை, ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகள் அறிவிப்பு; ஆகஸ்ட் 6 முதல் விற்பனை தொடங்குகிறது
  9. சாம்சங்கின் 50MP கேமரா கொண்ட மடிக்கக்கூடிய ஃபோனுக்கு ₹19,000 தள்ளுபடி; சமீபத்திய சலுகையைப் பாருங்கள்
  10. AI உதவியுடன் இன்டர்வியூவில் வென்று ₹1.5 கோடி வேலை பெற்ற நபர்; தனது உத்தியைப் பகிர்ந்துள்ளார்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.