Photo Credit: Paytm
Paytm சோலார் சவுண்ட்பாக்ஸ் 4G இணைப்பை ஆதரிக்கிறது
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போது நாம் பார்க்க இருப்பது Paytm Solar Soundbox பற்றி தான்.
Paytm பிராண்டைச் சேர்ந்த One97 Communications நிறுவனம் Paytm Solar Soundbox அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மின்சாரத்தால் இயங்கும் பேட்டரி 10 நாட்கள் வரை நீடிக்கும். வணிகர்களை மையமாகக் கொண்ட இந்த சாதனம் சூரிய சக்தி மூலம் சார்ஜ் ஏறும். நிலையான மின்சாரத்தால் இயங்கும் சாதனங்களுக்கு மாற்றாக இருக்கும். இந்த சாதனம் சிறிய கடை உரிமையாளர்கள் மற்றும் வணிகர்களை இலக்காகக் கொண்டது என்று பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சாதனம் இரட்டை பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் மேலே ஒரு சோலார் பேனலுடன் வருகிறது. இரண்டாவது பேட்டரி மின்சாரத்தை சப்போர்ட் செய்கிறது. சூரிய சார்ஜ் டிஸ்சார்ஜ் செய்யப்படும்போது குறைந்த அளவிலான மின்சாரத்தை எடுக்கும்.
குறைந்த விலை எரிசக்தி, மாற்று எரிசக்தியை பயன்படுத்தும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வாக இந்த சாதனம் அறிமுகப்படுத்தப்படுவதாக Paytm நிறுவனம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. சோலார் சவுண்ட்பாக்ஸ், மின்சார பற்றாக்குறையை அனுபவிக்கும் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள சிறு வணிகர்கள், வணிகர்கள், வண்டி விற்பனையாளர்கள் மற்றும் பிறரை இலக்காகக் கொண்டது.
பேடிஎம் சோலார் சவுண்ட்பாக்ஸில் சாதனத்தின் மேற்புறத்தில் ஒரு சோலார் பேனல் உள்ளது, இது சூரிய ஒளியில் சாதனத்தை தானாக சார்ஜ் செய்ய உதவுகிறது. முதன்மை பேட்டரி சூரிய சக்தியை சப்போர்ட் செய்யும் அதே வேளையில், மின்சாரத்தால் இயக்கப்படும் இரண்டாவது பேட்டரியும் சேர்க்கப்பட்டுள்ளது. சூரிய பேட்டரியை 2-3 மணி நேரம் சூரிய ஒளியில் சார்ஜ் செய்ய முடியும். ஒரு நாள் முழுவதும் பேட்டரி ஆயுளை வழங்குகிறது என்று நிறுவனம் கூறியது.
மறுபுறம், மின்சாரத்தால் இயங்கும் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 நாட்கள் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சவுண்ட்பாக்ஸில் பேடிஎம் க்யூஆர் குறியீடும் உள்ளது, இதை ஸ்கேன் செய்து ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) மற்றும் ரூபே கிரெடிட் கார்டு கட்டணங்களைச் செய்யலாம். கூடுதலாக, Paytm Solar Soundbox, வாடிக்கையாளர்கள் வணிகருக்குச் செலுத்தும் கட்டணங்களைப் பதிவு செய்ய 4G சப்போர்ட் இருக்கிறது. இது கட்டண உறுதிப்படுத்தல் குறித்து வணிகருக்குத் தெரிவிக்கும் 3W ஸ்பீக்கரையும் கொண்டுள்ளது. இது 11 மொழிகளில் இயங்கும்.
இந்த மலிவு விலை பேடிஎம் சோலார் சவுண்ட்பாக்ஸை அறிமுகப்படுத்துவது, குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் உள்ள சிறு வணிகங்களை மேம்படுத்துவதற்கான ஒரு படியாகும். கடந்த ஆண்டு, Paytm அதன் நுகர்வோர் செயலியில் UPI அறிக்கை பதிவிறக்கம் எனப்படும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது . இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் தங்கள் பரிவர்த்தனை வரலாற்றின் பதிவுகளைக் கொண்ட விரிவான ஆவணத்தை எளிதாக உருவாக்க முடியும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்