Oppo-வின் லேட்டஸ்ட் TWS Earphones ஆன Oppo Enco X3s, 55dB ANC, Dual Drivers மற்றும் 45 மணி நேர பேட்டரியுடன் வந்துள்ளது
 
                Photo Credit: Oppo
Oppo Enco X3s இயர்போன்கள் ஒற்றை நெபுலா சில்வர் நிறத்தில் விற்கப்படுகின்றன
Oppo Enco X3s TWS Earphones இப்போ உலக மார்க்கெட்க்கு லான்ச் ஆயிருக்கு. இது வெறும் இயர்போன் இல்ல. மியூசிக் ஃபேன்ஸ்-க்கான அல்டிமேட் டூல்! என்னென்ன இருக்குன்னு டீடைலா பார்க்கலாம் வாங்க. இதோட ஃபர்ஸ்ட் ஹைலைட்டே 55dB Active Noise Cancellation (ANC) தான். பஸ்ஸோ, ரயிலோ, இல்லனா ஆபீஸ் சத்தமோ... எதா இருந்தாலும் இந்த 55dB ANC அதை டோட்டலா பிளாக் பண்ணிரும். உங்களுக்குப் பிடிச்ச மியூசிக்ல மட்டும்தான் இனி கவனம் இருக்கும். சத்தம் அதிகமா இருந்தா, அதுக்கு ஏத்த மாதிரி ஆட்டோமேட்டிக்கா ANC-யை அட்ஜஸ்ட் பண்ற 'Real-time Dynamic ANC' அம்சமும் இதுல இருக்கு.
 
சவுண்டுக்கு உத்தரவாதம் கொடுக்க, இதுல Dual Dynamic Drivers கொடுத்திருக்காங்க. 11mm மற்றும் 6mm கோஆக்சியல் ட்ரைவர்கள், கூடவே பிரபல ஆடியோ நிறுவனமான Dynaudio-வோட ஸ்பெஷல் டியூனிங்கும் இருக்கு. மியூசிக், சினிமா, கேம்ஸ் எதுக்குன்னாலும் சவுண்ட் செம க்ளியரா, பன்ச்சியா இருக்கும். ஹை-ரெசல்யூஷன் ஆடியோவுக்கு LHDC 5.0 சப்போர்ட்டும் இதில் இருக்கு.
 
பேட்டரி லைஃப் பத்தி சொல்லணும்னா, இதுல ஒரு வேற்றுலக டெக்னாலஜி இருக்குனு தான் சொல்லணும். சார்ஜிங் கேஸோட சேர்த்து மொத்தம் 45 Hours Battery ப்ளேபேக் டைம் கிடைக்குதாம். ANC ஆஃப் பண்ணா, ஒரு இயர்பட் மட்டுமே 11 மணி நேரம் தாங்குமாம். இயர்பட்ஸ 50 நிமிஷத்துலயும், கேஸை 80 நிமிஷத்துலயும் சார்ஜ் செஞ்சிரலாம்.
 
அதுமட்டுமில்லாம, கேம் விளையாடுறவங்களுக்குன்னு தனியா Low Latency Game Mode-ம் கொடுத்திருக்காங்க. வியர்வை, லேசான மழைத்துளிகள் பத்தி கவலைப்படத் தேவையில்லை. ஏன்னா இது IP55 Water Resistance ரேட்டிங் கொண்டிருக்கு. இந்த இயர்பட் ஒன்னு வெறும் 4.7 கிராம் எடைதான் இருக்கு.
 
இதன் விலை சிங்கப்பூர்ல SGD 189-ஆ இருக்கு. இந்திய மதிப்புல தோராயமா ₹12,900. இந்தியால இந்த Oppo Enco X3s எப்போ லான்ச் ஆகும்னு Oppo தரப்புல இருந்து இன்னும் அதிகாரபூர்வமான தகவல் வரல. ஆனா, இந்த அம்சங்களோட இந்த TWS Earphones இந்தியாவுக்கு வந்தா, மார்க்கெட்ல இருக்குற பல பிராண்டுகளுக்கு ஒரு பெரிய சவாலா இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நீங்க இந்த இயர்போன்ஸ வாங்கலாமா? கமெண்ட்ல சொல்லுங்க!
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
 OpenAI Upgrades Sora App With Character Cameos, Video Stitching and Leaderboard
                            
                            
                                OpenAI Upgrades Sora App With Character Cameos, Video Stitching and Leaderboard
                            
                        
                     iQOO 15 Colour Options Confirmed Ahead of November 26 India Launch: Here’s What We Know So Far
                            
                            
                                iQOO 15 Colour Options Confirmed Ahead of November 26 India Launch: Here’s What We Know So Far
                            
                        
                     Vivo X300 to Be Available in India-Exclusive Red Colourway, Tipster Claims
                            
                            
                                Vivo X300 to Be Available in India-Exclusive Red Colourway, Tipster Claims
                            
                        
                     OpenAI Introduces Aardvark, an Agentic Security Researcher That Can Find and Fix Vulnerabilities
                            
                            
                                OpenAI Introduces Aardvark, an Agentic Security Researcher That Can Find and Fix Vulnerabilities