நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது Infinix XE27 பற்றி தான்.
ஹெட்போன் மாடலிகளில் புதுமை கொண்டு வருவதில் இன்ஃபினிக்ஸ் நிறுவனம் முன்னோடியாகும். இந்த நிறுவனம் இரண்டு புதிய ட்ரூலி வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்போன்களான Infinix XE27 மற்றும் Buds Neoவை அறிமுகப்படுத்த உள்ளது. இது ட்ரூலி வயர்லெஸ் ஸ்டீரியோ மாடலாகும். 25dB வரை தேவையற்ற இரைச்சலை குறைக்கும். ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷன் (ANC) வசதி உள்ளது. இந்த வெளியீடு Infinix நிறுவனத்தின் ஏழாண்டு ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த புதிய இயர்பட்கள் ஆகஸ்ட் 26 முதல் இந்தியாவில் Flipkart மூலம் கிடைக்கும். இயர்பட்கள் IPX4 ரேட்டிங், குறைந்த லேட்டன்சி கேமிங் பயன்முறை மற்றும் பல அம்சங்களை வழங்குகிறது.
இன்ஃபினிக்ஸ் Buds Neoவின் விலை ரூ.1,399 என்று நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதே போல XE27 TWS இயர்பட்ஸ் ரூ. 1,699 க்கு வருகிறது. இது வழக்கத்தை விட மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய நேர்த்தியான மற்றும் நீடித்த வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது ஆடியோ அனுபவத்தை மேம்படுத்துகிறது. Quad-Mic Environmental Noise Cancellation (ENC) என்கிற சத்தமில்லாத சூழலில் கூட தெளிவான அழைப்பு தரத்தை உறுதி செய்கிறது. கேமர்களுக்கு XE27 குறைந்த லேட்டன்சி கேமிங் வசதியை வழங்குகிறது. மொத்த பேட்டரி ஆயுள் 28 மணிநேரம் வரை வழங்குகிறது.
பாஸ்ட் சார்ஜ் அம்சம் மூலம் 60 நிமிடம் பயன்படுத்த 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதுமானது. மல்டிஃபங்க்ஸ்னல் டச் கன்ட்ரோல்கள் மூலம் பயனர்கள் பல்வேறு செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தலாம். Google Fast Pair சப்போர்ட் இருப்பதால் Flash Connect உடன் தடையற்ற இணைப்பை அனுபவிக்க முடியும்.
கூடுதலாக XE27 ஹெட்போன் நீர் எதிர்ப்பிற்காக IPX4 மதிப்பீடு பெற்றுள்ளது. இது வியர்வை மற்றும் லேசான மழைக்கு எதுவும் ஆகாது.
டிரைவர்: 10mm
ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷன் : 25dB வரை
Environmental Noise Cancellation (ENC): Quad-Mic
பேட்டரி ஆயும்: 28 மணி நேரம் வரை
பாஸ்ட் சார்ஜ்: 10 நிமிடத்தில் 60 பிளேபேக் தரும்
கேமிங் வசதி: 60ms Low Latency Gaming Mode
டச் கண்ட்ரோல்: Multifunctional
Pairing: Flash Connect with Google Fast Pair support
நீர்எதிர்ப்பு மதிப்பீடு: IPX4
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Infinix Buds Neo மாடல் பின்னடைவு இல்லாத கேமிங் அனுபவம் தரும். டச் கன்ட்ரோலை எளிதாக அணுகக்கூடியதாக உள்ளது. IPX4 மதிப்பீடு பெற்றுள்ளது. WeLife என்ற ஆப் மூலம் கட்டுப்படுத்தலாம்.
பட்ஸ் நியோ மேம்படுத்தப்பட்ட பாஸிற்கான 13 மிமீ இயக்கிகளை உள்ளடக்கியது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 28 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குகிறது. 10 நிமிட சார்ஜிங் 40 நிமிட பிளேபேக் நேரத்தை வழங்குகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்