அமேசான் நிறுவனம் தனது Echo Spot ஸ்மார்ட் ஸ்பீக்கர்களில் புதிய சாதனத்தை சேர்த்துள்ளது. எக்கோ ஸ்பாட்டின் சமீபத்திய அப்டேட் வானிலை விவரங்கள், பாடல் தலைப்புகள் மற்றும் பிற ஸ்மார்ட் சாதனங்களைக் கட்டுப்படுத்த உதவும். மேல் பகுதியில் வண்ணத் தொடுதிரையுடன் கூடிய அலெக்சா மூலம் இயங்கும் ஸ்மார்ட் ஸ்பீக்கர் உள்ளது. Echo Spot மூலம் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களைக் கட்டுப்படுத்தவும் முடியும்.
நைட் ஸ்டாண்டுடன் சிறப்பாக நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, பயனர்களுக்கு அலாரத்தை அமைக்க, நிர்வகிக்க, நேரத்தைப் பார்க்க மற்றும் உடனடி வானிலை அறிவிப்புகளைப் பெற எளிதான ஆப்ஷன்களை வழங்குகிறது. சிறந்த காட்சிகள் மற்றும் மேம்பட்ட ஆடியோ தரத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு, வயலட், மெஜந்தா, சுண்ணாம்பு கலர் மற்றும் நீலம் போன்ற ஆறு வெவ்வேறு வண்ணங்ளில் கிடைக்கிறது. 1.73-இன்ச் முன்பக்க ஸ்பீக்கரைக் கொண்டுள்ளது. இசையை இயக்கும்போது, வண்ணமயமான காட்சி அனிமேஷனைக் காண்பிக்கும். எக்கோ ஸ்பாட் மாடலில் கேமரா இல்லாததால் ஆடியோ அழைப்புகளை மட்டும் செய்யலாம்.
மிகச் சமீபத்திய எக்கோ சாதனங்களைப் போலவே, மைக்ரோஃபோனை ஆப் செய்து வைக்க ஒரு பட்டன் உள்ளது. பயனர்கள் அனைத்து குரல் பதிவுகளையும் ஒரே நேரத்தில் நீக்குவதற்கான ஆப்ஷன் உள்ளது. புதிய எக்கோ ஸ்பாட் இந்தியாவில் எப்போது கிடைக்கும் என்பது குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை.
Amazon Echo Spot 2024 விலை தோராயமாக ரூ. 6,680 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பிரைம் டே விற்பனையின் போது, அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு ரூ. 3,750 விலையில் கிடைத்தது. இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் மட்டும் கிடைக்கிறது. இந்தியாவில் அறிமுகப்படுத்தும் எந்த திட்டத்தையும் அமேசான் நிறுவனம் பகிர்ந்து கொள்ளவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்