ஜூம் செயலிக்கு மாற்றாக புதிய செயலி கண்டுபிடித்தால் '1 கோடி' பரிசு! - மத்திய அரசு

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 22 ஏப்ரல் 2020 11:17 IST
ஹைலைட்ஸ்
  • வீடியோ கான்பரன்சிங் ஆப்-பில்டிங் சவாலை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது
  • வெற்றியாளருக்கு ரூ.1 கோடி வழங்கப்படும்
  • சவாலில் இந்திய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி

ஜூம் செயலி மூலம் வீடியோ கான்பரன்சிங்கில் பங்கேற்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

Photo Credit: Twitter/ Rajnath Singh

மத்திய அரசு 'ஆப் டெவலப்மென்ட் சவாலை' அறிமுகப்படுத்தியுள்ளது. சவாலின் பரிசுத் தொகை ரூ.1 கோடி ஆகும். ஜூம் போன்ற பிரபலமான செயலிகளுக்கு மாற்றாக வீடியோ கான்பரன்சிங் செயலியை உருவாக்க இந்திய நிறுவனங்களுக்கு அரசு சவால் விடுத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களால் பிரபலமான வீடியோ கான்பரன்சிங் செயலியான ஜூம் கேள்விக்குள்ளான நேரத்தில், இந்த ஆப் டெவெலப்மென்ட் சவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சவால் "Innovation Challenge for Development of Video Conferencing Solution" என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது இந்தியா ஊரடங்கை எதிர்கொள்கிறது, எனவே வீட்டிலிருந்து வேலை செய்வது (Work from Home - WFH) கோடிக்கணக்கான மக்களுக்கு அவசியமாகிவிட்டது. வீட்டிலிருந்து வேலை செய்வது என்பது ஆன்லைனில் அதிக அளவு தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுவதால், தனியுரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து கவலையளிக்கிறது.

முக்கிய விவரங்கள்: 

இந்த செயலி மேம்பாட்டுத் திட்டத்திற்கான பதிவு ஏப்ரல் 13 முதல் தொடங்கி, ஏப்ரல் 30 நிறைவடைகிறது. வீடியோ கான்பரன்சிங் செயலி எந்த வகையான சாதனத்திலும் செயல்பட வேண்டும். இந்த செயலி, மிக மோசமான நெட்வொர்க் பகுதியில் அதன் வசதியை வழங்க முடியும். இது தவிர, மறைகுறியாக்கப்பட்ட (encrypted) தகவல்தொடர்பு இருக்க வேண்டும் மற்றும் செயலியின் பயன்பாடு மின் நுகர்வு குறைக்க வேண்டும்.

இந்த செயலி சவாலின் முடிவு ஜூலை 29 அன்று அரசாங்கத்தால் அறிவிக்கப்படும். வெற்றிபெற்ற அணிக்கு 1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும். அதே நேரத்தில், இந்த செயலி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரால் சான்றளிக்கப்படும்.

ஜூம் செயலிக்கு எதிராக, அரசு கடந்த வாரம் ஒரு ஆலோசனையை வெளியிட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த செயலியை அரசு அதிகாரிகள் பயன்படுத்தக்கூடாது என்று உள்துறை அமைச்சகத்தின் சைபர் ஒருங்கிணைப்பாளர் மையம் (Cyber Coordination Centre - CyCord) கூறியிருந்தது. முன்னதாக, சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கவனிக்கும் இந்தியாவின் நோடல் ஏஜென்சி சிஇஆர்டி-இன், ஜூம் வீடியோ கான்பரன்சிங் செயலி சைபர் தாக்குதல்களுக்கு ஆளாகக்கூடும் என்றும் எச்சரித்தது.

இது தவிர, கூகிள் மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு போன்ற சில நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை ஜூம் செயலியை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளன. இந்த செயலியைத் தவிர்க்குமாறு அமெரிக்க செனட் தனது உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் ஊரடங்கிலிருந்து பெரும்பாலான மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், ஜூம் செயலியின் புகழ் அதிகரித்தது. பல உயர் நீதிமன்றங்களும் அத்தியாவசிய விசாரணைக்கு ஜூம் செயலியை பயன்படுத்துகின்றன. இது மட்டுமல்லாமல், நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூட இந்த செயலியை பயன்படுத்துவதைக் காணலாம்.


Is iPhone SE the ultimate 'affordable' iPhone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. TRAI: SMS Variables-க்கு Pre-tagging கட்டாயம்; Phishing & Misuse தடுக்கும் புதிய விதி
  2. Qualcomm: Snapdragon 8 Gen 5 சிப்செட் நவம்பர் 26 அன்று சீனாவில் அறிமுகம்
  3. Realme 15 Lite 5G: Dimensity 8000 & 120Hz AMOLED உடன் Amazon-ல் விரைவில்!
  4. Jio: அனைத்து 5G Unlimited Subscribers-க்கும் Gemini 3 AI Pro திட்டம் 18 மாதங்கள் இலவசம்
  5. AppleCare+: Theft and Loss Protection உடன் புதிய சலுகைகள் இந்தியாவில் அறிமுகம்
  6. Vivo-ன் போட்டோகிராபி கிங்! X300 Pro-ல என்னென்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கோங்க! ZEISS Kit கூட வருது
  7. Lava Agni 4: Home Demo Campaign மூலம் வாங்குவதற்கு முன் அனுபவம்!
  8. OnePlus 15R: Black and Green Colourways உடன் இந்தியாவில் விரைவில் அறிமுகம்
  9. Poco F8 Ultra: Snapdragon 8 Elite Gen 5, 100W Charging உடன் நவம்பர் 26 அறிமுகம்
  10. X Chat: Encrypted DMs, File Sharing மற்றும் Voice/Video Calls வசதியுடன் அறிமுகம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.