வாட்ஸ் ஆப் நிறுவனம் தனது தயாரிப்பை போன்று இருக்கும் சில மூன்றாம் தரப்பு ஆப்களை தடை செய்துள்ளது. வாட்ஸ் ஆப் பிளஸ் அல்லது ஜிபி வாட்ஸ் ஆப் போன்ற மூன்றாம் நபர் செயலிகளுக்கு தற்காலிக தடையை வாட்ஸ் ஆஃப் நிறுவனம் அறிவித்துள்ளது.
இப்படி உங்களது வாட்ஸ் ஆப் கணக்கு பாதிக்கப்படுவதற்கு முன்னர் அதிகாரப்பூர்வமான வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ் ஆப்பின் தகவல் படி இம்மாதிரியான மூன்றாம் தரப்பு செயலிகள் தங்களது பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதாகவும் இந்த செயலிகள் தடை செய்யப்படுவதற்கு முன்னர் மெசேஜுகளை பேக்அப் செய்துகொள்ளும்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த தடை நிரந்திரம் இல்லை; எனினும் இம்மாதிரியான ஆப்களை விட சரியான வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துமாறு தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிவிப்பை அந்நிறுவனம் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்