‘இது வேற லெவல்…’ - WhatsApp-ல் வெகுநாளா எதிர்பார்த்த அப்டேட் இதோ..!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 21 அக்டோபர் 2019 12:48 IST
ஹைலைட்ஸ்
  • வாட்ஸ்அப்பின் 2.19.297 வெர்ஷனில் இந்த அப்டேட் தெரிகிறது
  • Splash Screen அப்டேட் தான் தற்போது விடப்பட்டுள்ளது
  • Dark Splash Screen அப்டேட்டும் விரைவில் விடப்படும்

WhatsApp Android beta update - இது குறித்த தகவலை WABetaInfo தளமும் உறுதி செய்துள்ளது.

Photo Credit: WABetaInfo

WhatsApp-ன் ஆண்ட்ராய்டு பேட்டா வெர்ஷன் 2.19.297-ல் ஒரு புதிய அப்டேட் விடப்பட்டுள்ளது. இந்த அப்டேட் மூலம் splash screen கறுப்பு நிறத்தில் தெரிகிறது. வாட்ஸ்அப்-ஐ திறந்தவுடன், லோட் ஆவதற்கு முன்னால் வருவதுதான் இந்த ஸ்பலாஷ் ஸ்க்ரீன். இந்த ஸ்கிரீனில் கறுப்பு நிற வண்ணம் வருவது, அடுத்ததாக வாட்ஸ்அப்பில் டார்க் மோட் வருவதற்கான அறிகுறி என்று சொல்லப்படுகிறது. 

இந்த அப்டேட் முதலில், வாட்ஸ்அப் பிசினஸ் செயலியில்தான் தெரிந்ததாம். தற்போது ஆண்ட்ராய்டு வெர்ஷனிலும் தெரிகிறதாம். இது குறித்த தகவலை WABetaInfo தளமும் உறுதி செய்துள்ளது. டார்க் மோட் வசதி எல்லா போன்களுக்கும் வர இன்னும் சில காலம் பிடிக்குமாம்.

இதை கவனிக்க: https://movies.ndtv.com/tamil/kollywood/darbar-movie-exclusive-update-2119372

இதைத் தவிர, வாட்ஸ்அப் வேறொரு அட்டகாசமான அப்டேட் விடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறதாம். வாட்ஸ்அப்பில் அனுப்பும் மெஸேஜ்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் தானாகவே அழிந்துவிடும் வகையில் அந்த அப்டேட் இருக்குமாம். விரைவில் அனைத்து வாட்ஸ்அப் வெர்ஷன்களுக்கும் இந்த அப்டேட் வருமாம்.

வாட்ஸ்அப் நிறுவனம், ‘வாட்ஸ்அப் பே' குறித்தும் சில மாதங்களாக வேலை செய்து வருகிறது. தற்போதைக்கு இந்த அப்டேட் இந்தோனேசியா நாட்டில் விடப்படும் என்றும் படிப்படியாக அது மற்ற நாடுகளுக்கும் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிகிறது. 


 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp, WhatsApp Android Beta
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Hubble Space Telescope மற்றும் Euclid Space Telescope இணைந்து எடுத்த Cat’s Eye Nebula-வின் புதிய அதிசயப் படம்
  2. Apple மடிக்கக்கூடிய iPhone ‘iPhone Ultra’ என அறிமுகமாகலாம்: விலை, மெமரி விவரங்கள் கசிந்தது
  3. Nothing Phone 4a, Nothing Phone 4a Pro இந்தியாவில் விற்பனைக்கு: விலை, சலுகைகள், அம்சங்கள்
  4. Poco X8 Pro Series – வெளியீட்டு தேதி, இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள்
  5. ChatGPT-இல் Chats-ஐ Delete மற்றும் Archive செய்வது எப்படி? – படிப்படியாக நீக்கும் முறைகள் இங்கே
  6. Realme 16T 5G, P4R 5G இந்தியாவில் விரைவில் அறிமுகம் – நிறங்கள், ஸ்டோரேஜ் தகவல் வெளியீடு
  7. இந்த வாரத்தின் சிறந்த OTT வெளியீடுகள் (மார்ச் 9 - மார்ச் 15): என்னென்ன படங்கள்ன்னு பாருங்கள்
  8. Samsung Galaxy M17e 5G இந்திய விலை லீக் – மார்ச் 17 அறிமுகத்திற்கு முன் தகவல்
  9. Motorola அறிமுகப்படுத்திய Motorola Edge 70 Fusion+ – Triple Camera, 5,200mAh பேட்டரி
  10. iPhone Fold-ல் iPad போன்ற UI, Split-Screen Apps ஆதரவு வரலாம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.