Photo Credit: Unsplash
வாட்ஸ்அப் சேனல் சரிபார்ப்பு வசதிகள் விரைவில் புதிய நிறத்திற்கு புதுப்பிக்கப்பட உள்ளது. வாட்ஸ்அப்பின் சமீபத்திய பீட்டா பதிப்பில் இப்போது இந்த வசதி வந்துள்ளது. இது எதிர்காலத்தில் அனைத்து பயனர்களுக்கும் வெளியிடப்படும். மெட்டாவின் Instagram மற்றும் Facebookல் உள்ள பயன்பாட்டிற்குள் இந்த சரிபார்ப்பு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப்பின் புதுப்பிக்கப்பட்ட டிக்மார்க் மூலம் நிறுவனத்தின் பயன்பாடுகள் முழுவதும் சீரான தன்மையை மேம்படுத்தும். பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பற்றி நன்கு அறிந்த பயனர்கள் தாங்கள் ஈடுபடும் நிறுவனம் உண்மையானதா என்பதை எளிதாகக் கண்டறிய உதவுகிறது. வாட்ஸ்அப் குரூப் சாட்களில் வாட்ஸ்அப் "கான்டெக்ஸ்ட் கார்டு" என்ற அம்சத்தை வெளியிட்டுள்ளது. இது பயனர்களுக்கு அவர்கள் சேர்க்கப்படும் குரூப் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்கும். குறிப்பாக தெரியாத நபர்கள் உங்களை குரூப் சாட்களில் சேர்த்தால், அவர்களுடைய விவரத்தை கண்டுபிடிக்க உதவியாக இருக்கும். மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சரிபார்ப்பு டிக் தற்போது ஆண்ட்ராய்டில் உள்ள WhatsApp பீட்டா சோதனையாளர்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இது வரும் நாட்களில் அல்லது வாரங்களில் iOS சோதனையாளர்களுக்கு வழங்கப்படலாம். இது இறுதியில் வாட்ஸ்அப் வெப் மற்றும் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் உள்ளிட்ட அனைத்திலும் கொண்டுவரப்படும்.
இதனுடன் மெட்டா வாட்ஸ்அப் அம்சங்களுடன் AI ஒருங்கிணைப்பை சோதித்து வருவதாக கூறப்படுகிறது. Meta AI சாட்பாட் பயனர்கள் உரையைத் திருத்தவும் படங்களுக்கு பதில்களை உருவாக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மெட்டா ஏஐ வழியாக படங்களை உருவாக்க, இமேஜின் மீ என்ற அம்சத்துடன் வாட்ஸ்அப் கேமரா வசதி சோதிக்கப்பட்டு வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
...மேலும்