மேற்கு வங்கத்தில் வீட்டிலிருந்து பணி செய்யும் ஊழியர்களை கண்காணிக்க சாஃப்ட்வேர் அறிமுகம்!!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 16 ஜூன் 2020 14:21 IST
ஹைலைட்ஸ்
  • If results are satisfactory, the software will used in other departments
  • Asymptomatic employees are allowed to come to office
  • The state government has also discouraged face-to-face meetings

மென்பொருள், அரசு ஊழியர்கள் பணியாற்றும் நேரத்தை கணக்கிட்டு முடிவுகளை அறிவிக்கும்.

மேற்கு வங்கத்தில் வீட்டிலிருந்து பணி புரியும் ஊழியர்கள் ஒழுங்காக பணியாற்றுகிறார்களா என்பது குறித்து கண்காணிக்க சாஃப்ட்வேர் ஒன்றை பயன்படுத்த அரசு தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கிடைக்கும் முடிவுகள் திருப்திகரமாக இருந்தால் அடுத்தடுத்த துறைகளுக்கும் இதே மென் பொருள் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அலுவலக  நேரங்களில் பணியாளர்கள் விதிகளை மீறக்கூடாது என்றும், அலுவலக நேரத்தில் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

இந்த மென்பொருளை பயன்படுத்தும்போது வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு லாக் இன் ஐ.டி., பாஸ்வேர்டு வழங்கப்படும்.  இதனை  பயன்படுத்தி பணியை ஆரம்பிக்கும்போது மென் பொருளுக்குள் நுழைய வேண்டும். 

மென்பொருள், அரசு ஊழியர்கள் பணியாற்றும் நேரத்தை கணக்கிட்டு முடிவுகளை அறிவிக்கும்.

கொரோனா காலத்தில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு சலுகையாக வீட்டிலிருந்து பணியாற்றும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  இந்த முறையை யாரும் தவறாக பயன்படுத்தி விடக் கூடாது என்று மேற்கு வங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேற்கு வங்கத்தில் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறி இருப்பவர்கள் அலுவலத்திற்கு வரத்தேவையில்லை. அவர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியலாம். 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கூட்டங்கள் நேரடியாக நடப்பது தவர்க்கப்பட்டு, ஆன்லைன் மூலமாக வீடியோ கான்பரன்சிங் வழியே கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Software, COVID 19, Coronavirus, West Bengal
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. X பிரீமியம் vs இலவசம்: 2026-ல் இந்தியாவில் X பிரீமியம் வாங்குவது மதிப்புள்ளதா?
  2. இந்தியாவில் உங்கள் இன்ஸ்டாகிராம் பயோவில் பல இணைப்புகளைச் சேர்ப்பது எப்படி: ஒரு படிப்படியான வழிகாட்டி
  3. ஒவ்வொரு இந்தியப் பயனரும் உடனடியாக இயக்க வேண்டிய முதல் 5 வாட்ஸ்அப் தனியுரிமை அமைப்புகள்
  4. இந்தியாவில் ரூ. 20,000-க்ககுள் 120Hz டிஸ்ப்ளே கொண்ட சிறந்த போன்கள்: iQOO Z11 Lite, Moto G37 Power, மேலும் பல
  5. ஐபோன், ஐபேட், மேக், வாட்ச் குத்தகை வசதிகளுடன் கூடிய ஆப்பிள் அப்கிரேட் திட்டம் ஜூலை 28-ல் தொடங்குவதாக தகவல்
  6. ஆப்பிளின் அதிக விலையுள்ள மடிக்க முடியாத போனாக ஐபோன் 18 புரோ மேக்ஸ் வரலாம்: கசிவு தகவல்!
  7. விரிவாக்கப்பட்ட தரவு பரிமாற்ற ஆதரவுடன் ஐபோனில் இருந்து மாறுவதை எளிதாக்குகிறது 'ஆண்ட்ராய்டு 17'
  8. 2026-இல் உங்கள் ஏர்டெல் இ-சிம்மை (Airtel eSIM) செயல்படுத்துவது எப்படி: படிப்படியான வழிகாட்டி
  9. இந்தியாவில் அறிமுகமாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக 'ஒன்பிளஸ் N6x' பேட்டரி திறன் வெளிப்படை
  10. வாட்ஸ்அப் ஐஓஎஸ் தளத்தில் புதிய உருண்டையான செய்தி குமிழி வடிவமைப்பை அறிமுகப்படுத்துகிறது: அறிக்கை
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.