தடை விதிப்பால் நாள் ஒன்றுக்கு ரூ. 3.50 கோடி இழப்பு! - 'டிக் டாக்' அலறல்!!

விளம்பரம்
Written by Reuters மேம்படுத்தப்பட்டது: 23 ஏப்ரல் 2019 19:29 IST

TikTok: உலகில் மிகவும் பிரபலமான ஆப்களில் டிக் டாக்கும் ஒன்று.

உலகில் மிகவும் பிரபலமான ஆப்களில் ஒன்றக இருக்கும் டிக் டாக்கிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ. 3.50 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக டிக் டாக் ஆப்-ஐ உருவாக்கிய நிறுவனமான பைட்-டான்ஸ் தெரிவித்துள்ளது. 

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த  பேட்டியில் பைட்-டான்ஸ் கூறியுள்ளது. டிக் டாக் மீதான தடையால் 250-க்கும் அதிகமானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆபாசத்தை ஊக்கப்படுத்துவதாக கூறி பிரபல செயலியான டிக் டாக்கிற்கு தற்காலிக தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்பேரில், ஆப்பிள் மற்றும் ப்ளே ஸ்டோர்களில் டிக் டாக் செயலி நீக்கம் செய்யப்பட்டது. 

இதனை எதிர்த்து டிக் டாக்கை உருவாக்கிய நிறுவனமான பைடான்ஸ், உச்ச நீதிமன்றத்தில் வாக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நாளைக்குள் உயர் நீதிமன்ற மதுரை கிளை முடிவு எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் டிக் டாக் மீதான தடை நீக்கப்பட்டதாக கொள்ளப்படும் என்றும் தெரிவித்தது. 

இந்த நிலையில்தான் டிக் டாக் தடையால் நாள் ஒன்றுக்கு ரூ. 3.50 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக பைட் டான்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: TikTok, India, Bytedance
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.