ஸ்விக்கி சூப்பர் இலவச டெலிவரி: சொமாட்டோவிற்கு போட்டியாக புதிய கட்டண சேவை

விளம்பரம்
Written by Ankit Chawla மேம்படுத்தப்பட்டது: 31 ஜூலை 2018 18:40 IST
ஹைலைட்ஸ்
  • ஸ்விக்கி சூப்பர் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும்
  • ஒரு மாதம், மூன்று மாதம் என இரு வகை பிளான்கள்
  • ஸ்விக்கி சூப்பர் சிறப்பு சேவைகளைப் பெற 99ரூபாய்க்கு ஆர்டர் செய்யவேண்டும்

 

ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்து டெலிவரி செய்வதில் இந்தியாவின் முன்னணி தளமான ஸ்விக்கி, புதிய கட்டண சேவையை தனது பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. எல்லா நேரத்திலும், ஆர்டர் செய்யக்கூடிய பகுதியில் உள்ள எல்லா உணவகங்களில் இருந்தும் இலவச டெலிவரியை இச்சேவையில் பெறலாம். இலவச டெலிவரியோடு, எந்நேரத்திலும் கூடுதல் விலை (surge pricing) கொடுக்கத் தேவை இன்றி சாதாரண விலைக்கே உணவினை ஆர்டர் செய்துகொள்ளலாம். குறைகளைத் தீர்ப்பதிலும் ஸ்விக்கி சூப்பர் சந்தாதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இது ஒரு மாதம், மூன்று மாதம் என இரண்டு பிளான்களாக அறிமுகம் ஆகிறது. ஒரு மாதத்துக்கான கட்டணம் 99-149 ரூபாயாக இருக்கும். மூன்று மாதத்துக்கான கட்டணம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. இந்தியா முழுவதுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இப்புதிய கட்டண சேவை அறிமுகம் ஆகிறது. வரும் மாதங்களில் இது அனைவருக்கும் விரிவுப்படுத்தப்பட இருக்கிறது. மேலும் புதிய சலுகைகளையும் எதிர்காலத்தில் ஸ்விக்கி சூப்பர் சந்ததாரர்களுக்கு அளிக்க இருக்கிறார்கள்.

இதன் மூலம் மூன்று வகையான கட்டண சேவைத்திட்டங்களை வழங்கி வரும் சொமாட்டோவிற்குப் போட்டியாக ஸ்விக்கியும் களத்தில் குதிக்கிறது. சொமாட்டோ ட்ரீட்ஸ் ஆண்டுக்கு 249ரூபாய், இதில் ஒவ்வொரு ஆர்டரின்போதும் ஒரு இனிப்பு இலவசமாகக் கிடைக்கும். இது தவிர சொமாட்டோ பிக்கிபாங்க், குறிப்பிட்ட சில உணவகங்களுக்குச் சென்று சாப்பிடும்போது மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் சொமாட்டோ கோல்டு ( உணவு 1+1, பானங்கள் 2+2) ஆகிய சேவைகளையும் சொமாட்டோ ஏற்கனவே வழங்கிவருகிறது.

 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Swiggy, Swiggy Super, Zomato
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.