இந்தியாவில் 'ஸ்பாடிஃபை' அறிமுகம்; இனி நான் ஸ்டாப்பாக பாடல்களை கேட்கலாம்!

இந்தியாவில் 'ஸ்பாடிஃபை' அறிமுகம்; இனி நான் ஸ்டாப்பாக பாடல்களை கேட்கலாம்!

ரூ.119 முதல் தொடங்கும் மாதாந்திர சந்தா!

ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் ஸ்பாடிஃபை அறிமுகம்!
  • ரூ.1,189க்கு வருடாந்திர சந்தா
  • ஸ்பாடிஃபை பயன்படுத்தும் 79வது நாடாக இணைந்தது இந்தியா!
விளம்பரம்

உலக நாடுகளில் மிகவும் பிரபலமான ஸ்பாடிஃபை நிறுவனம், அதிகபடியான பாடல்களை ஒலிபரப்பு செய்கிறது. ஆங்கிலம், ஃபிரெஞ்சு போன்ற பல மொழிகளில் உள்ள பாடல்களை ஒலிபரப்பும் இந்த ஸ்பாடிஃபை செயலி  தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.  

விங்க் மியூசிக், ஜியோ சாவன், ஆமேசான் மியூசிக் போன்ற பல போடியாளர்களுக்கு மத்தியில் ஸ்பாடிஃபை நிறுவனம் தனது செயலியை அறிமுகம் செய்துள்ளளது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த நிறுவனமான ஸ்பாடிஃபை உலகத்தில் அதிப்படியான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்பாடிஃபையின் சேவையைப் பெறும் 79வது நாடாக இந்தியா தற்போது உருவெடுத்துள்ளது.

இந்தியாவில் கட்டணம் மட்டும் சந்தாவைப் பொறுத்தவரை, ஸ்பாடிப்ஃபை நிறுவனம் பல வகையான திட்டங்களைத் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ரூ.119 மாதாந்திர சந்தாவும், ரூ.1189-க்கு வருடாந்திர சந்தா திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் இப்படி சாந்தா திட்டங்களை விரும்பாதவர்களுக்கு 'டாப் அப்' திட்டத்தையும் ஸ்பாடிஃப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த டாப் அப் பேக்குகள் ஒரு நாளைக்கு ரூ.13 முதல், ஆறு மாதத்துக்கு ரூ.719 வரை இருக்கிறது.

மேலும் இதில் முக்கிய அம்சமாக ப்ரீமியம் இணைப்பைப் பெரும் மாணவர்களுக்கு 50% தள்ளுபடியும் கிடைக்கிறது. தங்களது பள்ளி அல்லது கல்லூரி பயிலும் சான்றை ஆதாரமாக பதிவு செய்தால் இந்த தள்ளுபடியைப் பெறலாம்.

ஸ்பாடிஃபை நிறுவனம், முதல் 30 நாட்கள் இலவச சோதனைச் சேவையை பயனர்களுக்குக் கொடுக்கும்.  பிறகு செயலியின் சேவை தொடர்ந்து வேண்டும் என்றால் ப்ரீமியம் செய்துகொள்ளலாம் என்கின்ற ஆஃப்ஷனை தந்துள்ளது. இந்த ப்ரீமியம் வாடிக்கையாளராக இருக்கக் கட்டணம் செய்ய டெபிட் கார்டுகள், பேடிஎம் வாலட்டுகள், யூபிஐ வசதிகளை பயன்படுத்துவது சிறப்பம்சமாகும்.

இந்தியர்களுக்காக இந்த செயலியில் தற்போது பிராந்திய மொழிகளான தமிழ், பஞ்சாபி, தெலுங்கு போன்ற இந்திய மொழி பாடல்கள் முதல் தேர்வாக முன்னணியில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய பாடல்களுக்கு நல்ல வரவேற்பு இந்த செயலியில் கிடைக்கும் என எதிர்பார்கப்படுகிறது. 

ஸ்பாடிஃப்பை நிறுவனம் பாடல்களை ஒலிபரப்புவதில் சிறந்தததாக இருந்தாலும் இவைகளின் பாட்காஸ்டுகளும் (Podcast) பலரால் விரும்பப்படும் ஓன்று. ஸ்பாடிஃபை செயலிக்குள் இருக்கும் ஆல்காரிதம் கொண்ட மென்பொருளால் நமக்கு விரும்பும் வகை பாடல்களை தேர்ந்தொடுத்து வரசையாக ப்ளே செய்ய முடியும். ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு, இணையதளம் மட்டுமில்லாமல் எக்ஸ் பாக்ஸ் ஓன், விண்டோஸ் 10, ப்ளேஸ்டேஷன் 4, ஆமேசான் எக்கோ போன்ற ஸ்மார்ட் ஸ்பீக்கர்களிலும் இந்த செயலியை இணைத்து, பாடல்களைக்் கேட்க முடியும்.

இன்று அதிகாரப்பூர்வமாக ஸ்பாடிஃபை ஆப் வெளியிடப்பட்டாலும், நேற்றே ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் வெளியாகின. உலகம் முழுவதும் 96 மில்லியன் கட்டணம் செலுத்திய வாடிக்கையாளர்களை ஸ்பாடிஃபை கொண்டுள்ளது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Spotify, Spotify India Launch, Spotify India Price
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »