Snapchat-க்கு போட்டியாக களம் இறங்கி இருக்கும் புதிய ஆஃப்!

Snapchat-க்கு போட்டியாக களம் இறங்கி இருக்கும் புதிய ஆஃப்!
விளம்பரம்

சமூக ஊடகங்களை பயன்படுத்தியே தற்போது பெரும்பான்மையான மக்கள் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இதுவரை அயல் நாடுகளின் தயாரிப்புகளே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதையடுத்து இந்தியாவிலும் ஒரு புதிய ஆஃப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Pixalive என்னும் இந்த புதிய ஆஃப் நமது நண்பர்கள் மற்றும் மற்றவர்களை தொடர்பு கொள்ள உதவும் இந்த புதிய அஃப் இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல அதிநவீன தொழில்நுட்ப கட்டமைப்புகளை கொண்ட இந்த செயலியில் நாம் புகைப்படங்கள், வாசகங்கள் மற்றும் குரல் பதிவு செய்து கருத்துகளையும் பகிர்ந்துகொள்ள முடியும்.

இந்நிலையில் இந்த Pixalive ஆஃப் தங்களது வாடிக்கையாளர்களுக்காக தாங்கள் பதிவேற்றும் புகைப்படங்கள் மற்றும் கருத்துக்கள் தானாகவே மறையும் ஸ்பெஷல் அப்டேட் கொண்டது.

இந்த புதிய செயலியை கண்டுபிடித்த ராஜசேகர் சுந்தரேசன் தனது வாழ்க்கையின் மிக முக்கிய பங்காக இந்த செயலியை கருதுகிறார்.
இது குறித்து அவரிடம் பேசியபோது ராஜசேகர் ‘ என்னுடைய இந்த ஆஃப் வெளியாவது எனக்கு மிக சந்தோஷமாக உள்ளது. இந்த ஆஃபில் டிக்டாக், டப்ஸ்மாஷ் போன்ற எல்லா வகையான தொழில்நுட்பத்தையும் அறிமுகம் செய்துள்ளோம். Pixalive வரும் ஜனவரி மாதம் முதல் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும்' என தெரிவித்தார்.

மேலும் அவர் ‘ 2017-ஆம் ஆண்டில் Snapchat நிர்வாக இயக்குனர் இந்தியா மற்றும் ஸ்பேயின் போன்ற ஏழை நாடுகளில் தனது கண்டுபிடிப்பை பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்தார். இது என்னை மிகவும் பாதித்தது, இதுவே என்னை Pixalive யை உருவாக்க தூண்டியது' என கூறினார்.

Pixalive ஆஃப் அறிமுகம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் உருக்கமாக,  ‘இந்தியர்களுடன் மோதும் முன் யோசித்துகொள்ள வேண்டும்' என சவால் அளித்தார்.

மிகவும் கலர்ஃபுலாக பல நவீன தொழிநுட்பங்களுடன் இருக்கும் இந்த ஆஃப்பை கூகுள் பிளேவில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்பது கூடுதல் தகவல்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Pixalive, pixalive app
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »