Koo ஆப் ஊத்தி மூடப்பட்டது பின்னால் இவ்வளோ இருக்கா?

Koo ஆப் ஊத்தி மூடப்பட்டது பின்னால் இவ்வளோ இருக்கா?

Photo Credit: Koo

ஹைலைட்ஸ்
  • 2022ல் 1 கோடி மாதாந்திர ஆக்டிவ் யூசர்களும் 9000 விஐபி யூசர்களும் இருந்தனர
  • 3 ஆண்டுகளில் 6 கோடி முறை கூ ஆப் டவுன்லோடு செய்யப்பட்டது
  • KOO நிதியுதவி குளிர்காலத்தால் பாதிக்கப்பட்டது, இது மற்ற தொடக்கங்களையும்
விளம்பரம்

மைக்ரோ பிளாக்கிங் ஸ்டார்ட் அப் நிறுவனமான Koo சமூகவலைத்தளம் 2019ல் தொடங்கப்பட்டது. இந்தியாவில் டுவிட்டர் தளத்துக்கு மாற்றாக  Koo பார்க்கப்பட்டது.பெங்களூருவை தலைமை இடமாகக்கொண்டு தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் சேவை வழங்கி வந்தது.

2021ல் ட்விட்டர் நிறுவனத்துடன் மத்திய அரசுக்கு பிரச்னை ஏற்பட்ட
சமயத்தில் பல மத்தியஅமைச்சர்களும்,மத்திய அரசின் பல துறைகளும்
கூ வலைதளத்தை பயன்படுத்தின. இந்தியாவில் உருவான
கூ தளத்துக்கு பல தரப்பில் இருந்தும் ஆதரவு கிடைத்தது.
அதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் 6 கோடி முறை கூ ஆப் டவுன்லோடு செய்யப்பட்டு பெரும் வளர்ச்சியை கண்டது.

2022ல் 1 கோடி மாதாந்திர ஆக்டிவ் யூசர்களும் 9000 விஐபி யூசர்களும் இருந்தனர்.இருப்பினும் நாளடைவில், நிதி நெருக்கடி, நிறுவனத்தின் சந்தை நிலவரம், தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்கான பராமரிப்பு செலவு, பார்ட்னர்ஷிப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட பின்னடைவு உள்ளிட்ட காரணங்களினால் கூ நிறுவனத்தின் செயல்பாடு ஸ்தம்பித்து வந்தது.

இதனால் கடந்த ஆண்டு கூ தளத்தின் யூஸர்கள் எண்ணிக்கை கடுமையாக
சரியத்துவங்கியது. நிதி நெருக்கடி காரணமாக ஊழியர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. 30 சதவீத ஊழியர்களை அந்நிறுவனம் பணி நீக்கம் செய்தது. DailyHunt நிறுவனம் உடனான ஒப்பந்தம் தோல்வி அடைந்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது கூ சமூகவலைத்தளம் மூடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி ஊடக நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் வாய்ப்புகளை ஆராய்ந்தோம். ஆனால், பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படவில்லை. 
Koo செயலி தொடர்ந்து செயல்பட பெரும் முதலீடு தேவைப்படுகிறது, 
ஆனால், அதற்கான வழிகள் ஏதுமில்லை என அந்நிறுவனத்தின் இணை Mayank Bidawatka தெரிவித்தார். 
 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Koo, Social media, Koo app
Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. மேலும்
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO Z10 Turbo, iQOO Z10 Turbo Pro செல்போனில் இத்தனை ரகசியம் இருக்காம்
  2. Huawei Band 9 வாட்ச் நீங்க நீச்சல் அடிச்சல் கூட இது கண்காணிக்குமாம்
  3. என்னங்க சொல்றீங்க 2 ஆண்டுகளுக்கு YouTube Premium தரும் ஜியோ
  4. சாம்சங் இப்படிப்பட்ட அம்சத்துடனா இந்த செல்போனை வெளியிடுது
  5. கொடுக்கும் காசுக்கு வொர்த்! Oppo Reno 13 5G, Reno 13 Pro 5G செல்போன்கள்
  6. POCO X7 5G செல்போன் ஆரம்பமே இப்படி அடித்து ஆடினால் எப்படிங்க
  7. கால் முடிகளை கொண்டு வாசனை நுகரும் சிலந்திகள்! புதிய தகவல்
  8. Amazon Great Republic Day sale 2025 இப்போ விட்டா ரொம்ப வருத்தப்படுவீங்க
  9. 10 ஆயிரம் ரூபாய் இருந்தால் 5G செல்போன் கிடைக்குமா? இதோ கிடைக்குமே!
  10. புலி வருது வருதுன்னு சொல்லி சொல்லி நிஜமாவே வந்துடுச்சு OnePlus 13R
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »