உலகம் முழுவதும் பல பில்லியன் மக்கள் பயன்படுத்தும் ஃபேஸ்புக் மெசஞ்ஜர் செயலிக்கு ஒரு புதிய அப்டேட்டை அநிறுவனம் அறிவித்துள்ளது.
நேற்று வெளியான இந்த அப்டேட் படி, இனி நாம் தவராக அனுப்பிய குறுஞ்செய்திகளை நினைத்து வருந்தாத படி பிழையான குறுஞ்செய்திகளை நீக்கும் புதிய அமைப்பை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்டுத்தியுள்ளது.
தவறாக நாம் அனுப்பிய குறுஞ்செய்தியை அழிக்க 10 நிமிடம் இடைவேளை கொடுக்கப்பட்டுள்ளது, அதற்குள்ளே செய்தியை நம்மால் இல்லாமல் செய்துவிடமுடியும். ஆனால் வாட்ஸ் ஆப்பில் வரும் செய்தி அழிந்துவிட்டதாக இருக்கும் நோட்டிவிகேஷன் ஃபேஸ்புக்கில் வராது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனர் மற்றும் தலைமை அதிகாரியான மார்க் ஜூக்கர்பேர்க தனது குறுஞ்செய்தியகளை அழிக்க முயன்ற போது அந்த வசதி எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் என முடிவெடுத்தார். அதன்படி தற்பொழுது இந்த புதிய அப்டேட் எல்லாருக்கும் கிடைக்கும் படி ‘ரீமூவ் ஃபார் எவ்விரிவன்' என்ற ஆப்ஷன் வெளியாகிவுள்ளது.
மேலும் இந்த புதிய அப்டேட் தற்போதையை ஆப்பிள் போன்கள் மற்றும் அண்டிராய்டு போன்களுக்கும் கிடைக்கும் என்ற தகவலை ஃபேஸ்புக் நிறுவனம் வெளியாட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்