ஆரோக்ய சேது செயலியில் ‘பாதுகாப்பு பிரச்சனை’ உள்ளது! - பிரெஞ்சு ஹேக்கர்

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 6 மே 2020 15:09 IST
ஹைலைட்ஸ்
  • ஆரோக்ய சேது செயலியை ஒன்பது கோடி பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்
  • அவர் CERT-In & NIC குழுக்களால் சந்தேகிக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர் கூறினார
  • ஆரோக்ய சேது குழு, பாதுகாப்பு பிரச்சினை என்று ஒரு குறிப்பை வெளியிட்டது

ஆரோக்ய சேது செயலியின் பின்னால் உள்ள குழு இதுவரை எந்த பாதுகாப்பு சிக்கல்களையும் ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டது

எலியட் ஆல்டர்சன் (Elliot Alderson) என்ற ட்விட்டர் கணக்கை இயக்கும் பிரெஞ்சு பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ராபர்ட் பாப்டிஸ்ட் (Robert Baptiste), Aarogya Setu செயலியில் "பாதுகாப்பு பிரச்சனை" உள்ளது என்றார். இது கோடிக்கணக்கான இந்தியர்களின் தனியுரிமையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. பாதுகாப்பு பிரச்சனை குறித்து அரசிற்கும் அதன் 1.67 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களுக்கும் தெரிவிக்க அரசின் தொடர்பு தடமறிதல் செயலியில் செவ்வாயன்று ஆராய்ச்சியாளர் ட்வீட் செய்துள்ளார்.

இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு (CERT-In) மற்றும் தேசிய தகவல் மையம் (NIC) உடனடியாக ஆராய்ச்சியாளரை தொடர்பு கொண்டு சிக்கலைப் புரிந்துகொண்டன. இருப்பினும், ஆரோக்ய சேது செயலியை உருவாக்கிய குழு, ஆராய்ச்சியாளர் கூறிய கூற்றை மறுத்தது.

பாதுகாப்பு பிரச்சனைகளை தெளிவுபடுத்தாமல், ஆராய்ச்சியாளர் செவ்வாய்க்கிழமை ஆரோக்ய சேது செயலியின் பிரச்சனையை ட்வீட் செய்துள்ளார். ஆரோக்ய சேதுவின் அதிகாரப்பூர்வ கணக்கை ட்விட்டரில் குறிப்பிட்டு,  "90 மில்லியன் இந்தியர்களின் தனியுரிமை ஆபத்தில் உள்ளது என்று ஆராய்ச்சியாளர் எழுதினார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சொல்வது சரியானது என்று கூறி தனது ட்வீட்டில் ஒரு போஸ்ட்ஸ்கிரிப்டையும் ஆராய்ச்சியாளர் சேர்த்துள்ளார். ஆரோக்ய சேது செயலி "தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை" பற்றிய கவலைகளை எழுப்பும் "கண்காணிப்பு அமைப்பு" என்று ராகுத் காந்தி கடந்த வாரம் கூறினார். இந்த செயலி ஒரு தனியார் ஆபரேட்டருக்கு அவுட்சோர்ஸ் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.

அவரது ஆரம்ப ட்வீட்டைத் தொடர்ந்து 49 நிமிடங்களுக்குள், தன்னை சி.இ.ஆர்.டி-இன் மற்றும் என்.ஐ.சி குழுக்கள் தொடர்பு கொண்டதாக ஆய்வாளர் குறிப்பிட்டார். மேலும் இந்த பிரச்சினை வெளிவந்ததாக தெரிவித்தார்.

இந்த செயலி இந்தியாவில் சாதனை படைத்த முறையில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களில் இந்தியா முழுவதும் இந்த செயலி மில்லியன் கணக்கான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், தொடங்கப்பட்டதிலிருந்து, மென்பொருள் சுதந்திர சட்ட மையம், இந்தியா (SFLC.in) மற்றும் இணைய சுதந்திர அறக்கட்டளை (IFF) போன்ற குழுக்கள் இதை விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. 

இப்போது கூட இந்த செயலி அலுவலகங்களில் அவசியமாகிவிட்டது. சமீபத்தில் நொய்டாவில், போலீசாரும் இந்த செயலியை கட்டாயமாக்கியுள்ளனர்.

ஆரோக்கிய சேது செயலியின் குழு, புதன்கிழமை ஒரு ட்வீட் மூலம் ஆராய்ச்சியாளருடனான தொடர்பை ஒப்புக் கொண்டது. இருப்பினும், பாதுகாப்பு பிரச்சினை தொடர்பான எந்தவொரு தகவலையும் இந்த குழு இதுவரை பகிர்ந்து கொள்ளவில்ல., மேலும், பாதுகாப்பு பிரச்சினை என்று கூறப்படுவதையும் மறுத்துள்ளது.


In 2020, will WhatsApp get the killer feature that every Indian is waiting for? Samsung Galaxy S20 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Aarogya Setu app, Aarogya Setu, Elliot Alderson, Robert Baptiste
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Unpacked 2025: Z Flip 7 வந்துருச்சு! ₹1.1 லட்சத்துல பெரிய கவர் ஸ்க்ரீன், வேகமான சிப்செட்
  2. அறிமுகமானது Samsung Galaxy Z Fold 7: 1TB ஸ்டோரேஜ், பிரம்மாண்ட டிஸ்ப்ளே - ஜூலை 12 வரை சிறப்பு ப்ரீ-ஆர்டர்!
  3. Amazon Prime Day 2025: Samsung Galaxy Buds 3 Pro-வுக்கு ₹9,000 தள்ளுபடி! வெறும் ₹10,999-க்கு வாங்க வாய்ப்பு!
  4. Amazon Prime Day 2025: iQOO போன்களுக்கு அதிரடி தள்ளுபடி! ₹52,999-க்கு iQOO 13
  5. அதிர்ச்சி! Vivo X Fold 5 விலை ₹1.5 லட்சம்! X200 FE-ல் 6500mAh பேட்டரி - லீக் தகவல்கள் இதோ!
  6. Apple-ன் அடுத்த மாஸ்டர்பீஸ்: iPhone 17 Pro Max-ல் பேட்டரி புரட்சி! நீண்ட நேரம் யூஸ் பண்ணலாமா?
  7. Honor X9c 5G: ஜூலை 7-ல் இந்திய லான்ச்! 108MP OIS கேமரா, 6600mAh பேட்டரியுடன் மிரட்ட வருகிறது!
  8. Amazon Prime Day Sale: எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 65% வரை ஆஃபர்! பேங்க் சலுகைகளுடன் அசத்துகிறது!
  9. నథింగ్ ఫోన్ 3 స్మార్ట్‌ఫోన్ Android 15 ఆధారంగా రూపొందించిన నథింగ్ OS 3.5 పై రన్ అవుతుంది
  10. Nothing Headphone 1: 80 மணி நேர பேட்டரி லைஃப், டிரான்ஸ்பரண்ட் டிசைனுடன் இந்தியாவில் லான்ச்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.