சாம்சங் மட்டும் தான் மடிக்கும் போன் விடுமா? அசத்தும் Xiaomi Mix Flip

சாம்சங் மட்டும் தான் மடிக்கும் போன் விடுமா? அசத்தும்  Xiaomi Mix Flip

Photo Credit: X/Lie Jun

ஹைலைட்ஸ்
  • Xiaomi Mix Flip செல்போன் மாடல் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது சீனா
  • இது Mix Fold 4, Redmi K70 Ultra மற்றும் பிற சாதனங்களுடன் அறிமுகமாகும்
  • மிக்ஸ் ஃபிளிப் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பத
விளம்பரம்

Xiaomi Mix Flip செல்போன் மாடல் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது சீனாவில் நடத்தப்பட்ட நிகழ்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன்  Xiaomi Mix Fold 4 , Redmi K70 Ultra, Watch S4 Sport, Buds 5 மற்றும் Smart Band 9 உட்பட பிற தயாரிப்புகளும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Xiaomi Mix Flip ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப் மூலம் இயக்கப்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன்களுக்கான தற்போதைய தலைமுறை சிப்செட் ஆகும். சியோமி 14 அல்ட்ரா போலவே லைகா-டியூன் செய்யப்பட்ட இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. கீழ் லென்ஸில் எல்இடி ஃபிளாஷ் உள்ளது. அடிப்பகுதியில் ஸ்பீக்கர் கிரில், மைக்ரோஃபோன், USB டைப்-சி போர்ட் மற்றும் சிம் ட்ரே ஆகியவை உள்ளது. 
Xiaomi Mix Flip கருப்பு, ஊதா வெள்ளி மற்றும் வெள்ளை உட்பட பல வண்ணங்களில் வரக்கூடும் என தெரிகிறது. 

Xiaomi Mix Flip செல்போன் மாடல் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது சீனாவில் நடத்தப்பட்ட நிகழ்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன்  Xiaomi Mix Fold 4 , Redmi K70 Ultra, Watch S4 Sport, Buds 5 மற்றும் Smart Band 9 உட்பட பிற தயாரிப்புகளும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Xiaomi Mix Flip ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப் மூலம் இயக்கப்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன்களுக்கான தற்போதைய தலைமுறை சிப்செட் ஆகும். சியோமி 14 அல்ட்ரா போலவே லைகா-டியூன் செய்யப்பட்ட இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. கீழ் லென்ஸில் எல்இடி ஃபிளாஷ் உள்ளது. அடிப்பகுதியில் ஸ்பீக்கர் கிரில், மைக்ரோஃபோன், USB டைப்-சி போர்ட் மற்றும் சிம் ட்ரே ஆகியவை உள்ளது. 
Xiaomi Mix Flip கருப்பு, ஊதா வெள்ளி மற்றும் வெள்ளை உட்பட பல வண்ணங்களில் வரக்கூடும் என தெரிகிறது. 

Xiaomi Mix Flip செல்போன் 1.5K ரெசல்யூஷன் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமராவை பொறுத்தவரையில் 50 மெகாபிக்சல் OV50E முதன்மை சென்சார் கொண்ட கேமரா மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 60 மெகாபிக்சல் OV60A கேமரா இருக்கிறது. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் கேமரா செல்ஃபி ஷூட்டருடன் உள்ளது. 67W ஃபாஸ்ட் சார்ஜிங் திறனுடன் 4,700mAh பேட்டரியை கொண்டுள்ளது. 
 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi Mix Flip, Xiaomi, Xiaomi Flip, Mix Fold 4
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »