Call Waiting அம்சத்துடன் வருகிறது Truecaller Voice!

Call Waiting அம்சத்துடன் வருகிறது Truecaller Voice!

Android-ல் அறிமுகமாகி சில மாதங்களுக்கு பிறகு, iOs பயனாளர்களுக்கு இந்த வசதியை வழங்கியுள்ளது Turecaller Voice

ஹைலைட்ஸ்
  • இரண்டாவது அழைப்பு வரும்போது Truecaller Voice உங்களுக்கு தெரிவிக்கும்!
  • இந்த சேவை Truecaller-ன் caller ID அம்சத்தையும் பெற்றுள்ளது!
  • unknown numbers மற்றும் voice spam VoIP calls-களை கண்டறிய உதவுகிறது!
விளம்பரம்


Truecaller Voice, Voice over Internet Protocol (VoIP) அடிப்படையிலான குரல் அழைப்பு சேவை. ஒருங்கிணைந்த call waiting அம்சத்துடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் Truecaller பயனர்களுக்கு "குறுக்கீடு இல்லாத" குரல் அழைப்பு வழங்குவதைக் கொண்டுள்ளது. புதிய அப்டேட்டை தவிர, உலகெங்கிலும் உள்ள iOS பயனர்களுக்கும் Truecaller Voice வழங்கப்பட்டுள்ளது. இந்த சேவை முன்பு Android பயனர்களுக்கு வழங்கப்பட்டது. மொபைல் டேட்டா அல்லது வைஃபை நெட்வொர்க்கைப் பயன்படுத்தி Truecaller பயன்பாட்டில் குரல் அழைப்புகளை இயக்க இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரபலமான பயன்பாடுகளான வாட்ஸ்அப் மற்றும் ஸ்கைப் போன்ற குரல் அழைப்பு ஆதரவுக்கு எதிரான போட்டியாளராகும்.

Call Waiting அம்சத்துடன், Truecaller Voice பயனர்களுக்கு இரண்டாவது அழைப்பைப் பெறும்போது அவர்களுக்குத் தெரிவிக்கும். தற்போதைய அழைப்பை தானாக இடைநிறுத்தாமல் அறிவிப்பு வருகிறது. மேலும், Call Waiting status குறித்து இரண்டாவது அழைப்பாளருக்கு செயலி தெரிவிக்கிறது.

"இது பயனர்களுக்கு தற்போதைய VoIP calls தொடர அல்லது அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இரண்டாவது அழைப்பிற்கு மாற வசதியை வழங்குகிறது. தொலைபேசி மற்றும் VoIP calls இரண்டிலும் தடையின்றி செயல்பட இந்த அம்சம் கட்டமைக்கப்பட்டுள்ளது" என்று நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Call Waiting அம்சத்துடன், புதுப்பிக்கப்பட்ட Truecaller Voice-ன் சின்னமான caller ID அம்சம் உள்ளது. இது unknown numbers மற்றும் voice spam VoIP calls-களை கண்டறிய பயனர்களுக்கு உதவுகிறது.

Call Waiting அம்சத்துடன் caller ID அம்சமும் பயனர்கள் இரண்டாவது அழைப்பில் கலந்து கொள்ள வேண்டுமா அல்லது தற்போதைய அழைப்பைத் தொடர வேண்டுமா என்பதை தீர்மானிக்க உதவுகிறது.

உலகளவில் அனைத்து iOS பயனர்களுக்கும் Truecaller Voice-ஐ வெளியிடுவதன் மூலம் Truecaller தனது VoIP சேவையை விரிவாக்குவதாக அறிவித்துள்ளது. இந்த சேவை ஆரம்பத்தில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது.

புதிய மாற்றங்கள் Truecaller-ன் புதிய பயனர்களை ஈர்க்கவும் அதன் குரல் சேவையில் ஈடுபாட்டை மேம்படுத்தவும் உதவும். செப்டம்பர் நிலவரப்படி, Truecaller பயன்பாட்டில் 500 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களை கடந்துள்ளது. உலகளவில், 150 மில்லியன் தினசரி பயனர்கள் உள்ளனர்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Truecaller Voice, Truecaller
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »