1 TB ஸ்டோரேஜ் கொண்ட Mi Laptop அறிமுகம்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 23 அக்டோபர் 2019 09:33 IST
ஹைலைட்ஸ்
  • Mi Notebook Pro 15 Enhanced Edition, full-HD டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது
  • இந்த மடிக்கணினி 60Wh மற்றும் backlit keyboard பொருத்தப்பட்டுள்ளது
  • Intel core i7-10510U processor-ஆல் இயக்கப்படுகிறது

Mi Notebook Pro 15 Enhanced Edition-ன் விற்பனை சீனாவில் தொடங்கியுள்ளது

ஜியோமி, சீனாவில் புதிய Mi Notebook Pro 15 Enhanced Edition-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது Mi Notebook Pro (2019) மாடலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். இதில் temperature management-டிற்கு dual fan அமைப்பு, 1080p full-HD டிஸ்பிளே, 1TB வரை ஸ்டோரேஜ் விருப்பம் மற்றும் Windows 10 operating system ஆகியவற்றுடன் வருகிறது.  புதிய Mi Notebook Pro 15, நவம்பர் 1 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.

Mi Notebook Pro 15 Enhanced Edition, i7/16GB/1TB பதிப்பிற்கு சீனாவில் CNY 6,999 (சுமார் ரூ. 70,100)-க்கு சில்லரை விற்பனை செய்யும் என்று ஜியோமி கூறுகிறது. மடிக்கணினி முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்டுள்ளது, இது நவம்பர் 1 முதல் விற்பனைக்கு வரும். metal body மற்றும் dark grey finish அம்சத்துடன், temperature management-டிற்கு heat pipes மற்றும் dual fans ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Mi Notebook Pro 15 Enhanced Edition-ன் விவரக்குறிப்புகள்:

Mi Notebook Pro 15 Enhanced Edition, 15.6-inch full-HD (1080p) டிஸ்பிளேவுடன் 100% sRGB high colour gamut உடன் வருகிறது. 16GB RAM, Nvidia GeForce MX250 GPU மற்றும் 1TB வரை ஸ்டோரேஜ் இணைக்கப்பட்டு, 10th Generation Intel Core i7-10510U SoC-யால் இயக்கப்படுகிறது. 

19.5 மிமீ பெரிய விசைகளை தட்டச்சு செய்வதற்கு எளிதாக, 60Wh பேட்டரி மற்றும் முழு அளவிலான backlit keyboard ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. போர்டில் 720p video call ஆதரவுடன் 1-megapixel கேமரா மற்றும் HDMI, USB Type-C Port, 3.5mm audio jack கொண்டது. மடிக்கணினி, சுமார் 2 கிலோ எடை மற்றும் 16.9mm தடிமன் கொண்டது.

முன்னர் குறிப்பிட்டபடி, Mi Notebook Pro 15 Enhanced Edition இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Mi Notebook Pro 15-யின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். வேறுபாடுகளில், புதிய லேப்டாப்பில் மேம்படுத்தப்பட்ட செயலிகள், அதிக SSD ஸ்டோரேஜ் மற்றும் புதிய ஒலி கார்டு ஆகியவை உள்ளன. 

 
KEY SPECS
Display size 15.60-inch
Display resolution 1920x1080 pixels
Processor Core i5
RAM 8GB
OS Windows 10 Home
SSD 512GB
Graphics Nvidia GeForce MX250
Weight 2.00 kg
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Hubble Space Telescope மற்றும் Euclid Space Telescope இணைந்து எடுத்த Cat’s Eye Nebula-வின் புதிய அதிசயப் படம்
  2. Apple மடிக்கக்கூடிய iPhone ‘iPhone Ultra’ என அறிமுகமாகலாம்: விலை, மெமரி விவரங்கள் கசிந்தது
  3. Nothing Phone 4a, Nothing Phone 4a Pro இந்தியாவில் விற்பனைக்கு: விலை, சலுகைகள், அம்சங்கள்
  4. Poco X8 Pro Series – வெளியீட்டு தேதி, இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள்
  5. ChatGPT-இல் Chats-ஐ Delete மற்றும் Archive செய்வது எப்படி? – படிப்படியாக நீக்கும் முறைகள் இங்கே
  6. Realme 16T 5G, P4R 5G இந்தியாவில் விரைவில் அறிமுகம் – நிறங்கள், ஸ்டோரேஜ் தகவல் வெளியீடு
  7. இந்த வாரத்தின் சிறந்த OTT வெளியீடுகள் (மார்ச் 9 - மார்ச் 15): என்னென்ன படங்கள்ன்னு பாருங்கள்
  8. Samsung Galaxy M17e 5G இந்திய விலை லீக் – மார்ச் 17 அறிமுகத்திற்கு முன் தகவல்
  9. Motorola அறிமுகப்படுத்திய Motorola Edge 70 Fusion+ – Triple Camera, 5,200mAh பேட்டரி
  10. iPhone Fold-ல் iPad போன்ற UI, Split-Screen Apps ஆதரவு வரலாம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.